வரலாற்றில் இன்று (17.12.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

திசம்பர் 17 (December 17) கிரிகோரியன் ஆண்டின் 351 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 352 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 14 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

942 – நோர்மண்டியின் முதலாம் வில்லியம் படுகொலை செய்யப்பட்டான்.
1398 – தில்லியில் சுல்தான் நசீருதின் மெகுமூதின் படையினர் பேரரசர் தைமூரினால் தோற்கடிக்கப்பட்டனர்.
1538 – பாப்பரசர் மூன்றாம் பவுல் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னரை திருச்சபைத் தொடர்புகளில் இருந்து விலக்கினார்.
1577 – பிரித்தானிய அரசி முதலாம் எலிசபெத்துக்காக அமெரிக்காக்களின் பசிபிக் பெருங்கடல் பகுதியை ஆராய்வதற்காக பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்து, பிளைமவுத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டார்.
1586 – கோ-யோசெய் சப்பானின் பேரரசராக முடிசூடினார்.
1718 – பெரிய பிரித்தானியா எசுப்பானியா மீது போரை அறிவித்தது.
1777 – அமெரிக்கப் புரட்சி: பிரான்சு ஐக்கிய அமெரிக்காவை அங்கீகரித்தது.
1819 – சிமோன் பொலிவார் பெரிய கொலம்பியாவின் விடுதலையை அறிவித்தார்.
1835 – நியூயார்க் நகரில் இடம்பெற்ற பெரும் தீயில் 50 ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்தது.
1837 – உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் உள்ள குளிர்கால அரண்மனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 காவலாளர்கள் உயிரிழந்தனர்.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் டென்னசி, மிசிசிப்பி, கென்டக்கி ஆகிய மாநிலங்களில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
1903 – ரைட் சகோதரர்கள் வடக்கு கரொலைனாவில் முதன்முதலில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ரைட் பிளையர் ஊர்தியில் பறந்தனர்.
1907 – யூஜியன் வாங்சுக் பூட்டானின் முதலாவது மன்னராக முடிசூடினார்.
1918 – ஆத்திரேலியாவின் டார்வின் நகரில் ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டனர்.
1926 – லித்துவேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மக்களாட்சி அரசு கலைக்கப்பட்டு அண்டானசு சிமெத்தோனா ஆட்சியைப் பிடித்தார்.
1928 – காவல்துறையினரின் பாதுகாப்பிலிருந்த லாலா லஜபதி ராய் கொல்லப்பட்டதற்குப் பழி வாங்கும் முகமாக இந்தியப் புரட்சியாளர்கள் பகத் சிங், சுக்தேவ் தபார், சிவராம் ராஜகுரு ஆகியோர் பிரித்தானியக் காவல்துறை அதிகாரி ஜேம்சு சோண்டர்சு என்பவரை பஞ்சாப், லாகூரில் படுகொலை செய்தனர்.
1938 – ஓட்டோ ஹான் யுரேனியத்தின் அணுக்கருப் பிளவைக் கண்டுபிடித்தார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படைகள் வடக்கு போர்னியோவில் இறங்கினர்.
1943 – ஐக்கிய அமெரிக்காவில் சீனர்கள் குடியுரிமை பெறுவதகு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.
1944 – இரண்டாம் உலகப் போர்: பல்ஜ் சண்டை: மால்மெடி படுகொலை: அமெரிக்கப் போர்க்கைதிகள் 84 பேர் செருமனியப் படைகளினால் பெல்ஜியத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1947 – இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1957 – அமெரிக்கா முதலாவது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அட்லசு ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது.
1960 – எத்தியோப்பியாவின் பேரரசர் முதலாம் ஹைலி செலாசியின் படையினர் டிசம்பர் 13 இல் ஆரம்பமான ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையை முறியடித்தனர்.
1960 – செருமனியின் மியூனிக் நகரில் விமானம் ஒன்று தரையில் வீழ்ந்ததில் 20 பயணிகளும், தரையில் 32 பேரும் உயிரிழந்தனர்.
1961 – பிரேசில், இரியோ டி செனீரோ நகரில் வட்டரங்கு களியாட்ட நிகழ்வில் தீப்பிடித்ததில் 500 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1967 – ஆத்திரேலியப் பிரதமர் ஹரல்ட் ஹோல்ட் விக்டோரியா மாநிலத்தில் கடலில் நீந்தும்போது காணாமல் போனார். இவர் கடலில் மூழ்கி இறந்து விட்டதாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது.
1969 – ஐக்கிய அமெரிக்க வான் படை அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள் பற்றிய ஆய்வை முடித்துக் கொண்டதாக அறிவித்தது.
1970 – போலந்தில் கிதீனியா நகரில் தொடருந்துகளில் இருந்து இறங்கிய தொழிலாளர்களை நோக்கிப் படையினர் சுட்டதில் பலர் கொல்லப்பட்டனர்.
1973 – ரோம் நகர விமான நிலையத்தை பாலத்தீனப் போராளிகள் தாக்கியதில் 30 பயணிகள் கொல்லப்பட்டனர்.
1983 – லண்டனில் ஹரட்ஸ் பல்பொருள் அங்காடியில் ஐரியக் குடியரசுப் படையினரின் குண்டுத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
1989 – உருமேனியாவில் கம்யூனிச அரசுக்கு எதிரான ஆர்பபட்டங்கள் தொடர்ந்தன. கம்யூனிஸ்டுக் கட்சியின் மாவட்ட செயலகம் தீவைத்துக் கொளுத்தப்பட்டது.
1989 – 25 ஆண்டுகளின் பின்னர் பிரேசிலில் முதலாவது பொதுத்தேர்தல் இடம்பெற்றது.
2005 – பூட்டான் மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சுக் முடிதுறந்தார்.
2009 – லெபனானில் டானி எஃப்11 என்ற கப்பல் கவிழ்ந்ததில் 44 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 28,000 மிருகங்களும் உயிரிழந்தன.
2010 – முகம்மது பொசீசி என்பவர் தீக்குளித்து இறந்தார். இந்நிகழ்வு துனீசியப் புரட்சி, மற்றும் அரேபிய வசந்தம் ஆகியவற்றிற்கு வழிவகுத்தது.
2014 – ஐக்கிய அமெரிக்காவும் கியூபாவும் 1960 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதற்தடவையாக தூதரக உறவைப் புதுப்பித்துக் கொண்டன.

பிறப்புகள்

1556 – அப்துல் ரஹீம் கான்-இ-கானா, பாக்கித்தானிய-இந்தியக் கவிஞர் (இ. 1627)
1778 – ஹம்பிரி டேவி, ஆங்கிலேய வேதியியலாளர், இயற்பியலாளர் (இ. 1829)
1797 – ஜோசப் ஹென்றி, அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1878)
1905 – முகம்மது இதயத்துல்லா, 11வது இந்தியத் தலைமை நீதிபதி, அரசியல்வாதி (இ. 1992)
1908 – வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 1980)
1935 – உமையாள்புரம் கே. சிவராமன், தமிழக மிருதங்கக் கலைஞர்
1936 – திருத்தந்தை பிரான்சிசு
1942 – முகம்மது புகாரி, நைஜீரியாவின் 7வது அரசுத்தலைவர்
1956 – அல்மாஸ்பெக் அத்தம்பாயெவ், கிர்கித்தான் அரசியல்வாதி
1958 – ஜெயசுதா, தென்னிந்திய நடிகை, அரசியல்வாதி
1959 – மனோ கணேசன், இலங்கைத் தொழிற்சங்கத் தலைவர், அரசியல்வாதி
1959 – ரஞ்சகுமார், இலங்கை-ஆத்திரேலியத் தமிழ் எழுத்தாளர்
1972 – ஜான் ஆபிரகாம், இந்திய நடிகர், தயாரிப்பாளர்
1975 – சுசந்திகா ஜயசிங்க, இலங்கை ஓட்ட வீராங்கனை
1975 – மில்லா ஜோவோவிச், உக்ரைனிய-அமெரிக்க நடிகை
1978 – ரித்தேஷ் தேஷ்முக், இந்தியத் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர்
1992 – குவின்டன் டி கொக், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர்

இறப்புகள்

1273 – ரூமி, பாரசீகக் கவிஞர், இறையியலாளர் (பி. 1207)
1830 – சிமோன் பொலிவார், வெனிசுவேலாவின் 2வது அரசுத்தலைவர் (பி. 1783)
1907 – வில்லியம் தாம்சன், ஐரிய-இசுக்கொட்டிய இயற்பியலாளர் (பி. 1824)
1946 – கிரிகொரி நியூயிமின், உருசிய வானியலாளர் (பி. 1885)
1947 – ஜொஹான்ஸ் நிக்கொலஸ் பிரோன்ஸ்ட்டெட், தென்மார்க்கு வேதியியலாளர் (பி. 1879)
1967 – ஹரல்ட் ஹோல்ட், ஆத்திரேலியாவின் 17வது பிரதமர் (பி. 1908)
1975 – சோ. இளமுருகனார், ஈழத்துப் புலவர் (பி. 1908)
2002 – கே. டபிள்யூ. தேவநாயகம், இலங்கை அரசியல்வாதி (பி. 1910)
2011 – கிம் ஜொங்-இல், வடகொரியாவின் 2வது அரசுத்தலைவர் (பி. 1941)
2016 – ஆன் றணசிங்க, செருமானிய-யூத எழுத்தாளர் (பி. 1925)

சிறப்பு நாள்

பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு நாள்
ஓய்வூதியர் நாள் (இந்தியா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!