மலேசியப் பிரதமர் மகாதீர்: 94 வயதில் மகளுடன் நடனமாடி அசத்தினார்

94 வயதான மகாதீர், மிக நளினமாக நடனமாடியதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மலேசியப் பிரதமரின் மகள் மரீனா மகாதீர் ஏற்பாட்டில், தொண்டு ஊழியத்துக்காக நிதி திரட்டும் வகையில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் தனது மனைவி டாக்டர் சித்தி ஹஸ்மாவுடன் (Siti Hasmah) கலந்து கொண்டார் மகாதீர். அப்போது மகளின் அழைப்பை ஏற்று அவருடன் நடனமாடினார். 


இந்நிகழ்விற்கு மூத்த அரசு அதிகாரிகள், வெளிநாட்டுத் தூதர்கள், துணைத் தூதர்கள் பலர் வந்திருந்தனர். அவர்கள் கைதட்டிப் பாராட்ட, மகள் மரீனாவுடன் இணைந்து நளினமான நடன அசைவுகளை வெளிப்படுத்தினார் மகாதீர். 
இதையடுத்து அவர் ஒரு மலாய் பாடலையும் பாடினார். அவரது மனைவி வயலின் இசைத்தார். பிரதமருக்குரிய பணிச்சுமைக்கு மத்தியில் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க பிரதமர் மகாதீர் தவறுவதில்லை.

வாய்ப்பு கிடைக்கும் போது குதிரையேற்றப் பயிற்சியில் ஈடுபடுவது, மிதிவண்டி ஓட்டுவது என்று எப்போதுமே அவர் தன்னை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்கிறார். இந்நிலையில் அவரது நடனத்துடன் கூடிய ஒரு நிமிட காணொளிப்பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரால் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!