ஜம்முவில் அடுக்குமாடிக் கட்டடம் தரைமட்டமானது;
இடிபாடுகளில் சிக்கிய தீயணைப்பு வீரர்கள்….
ஜம்மு: ஜம்முவில் மூன்று அடுக்குமாடிகளைக் கொண்ட கட்டடத்துக்குள் தீப்பிடித்த போது அதனை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயன்ற போது திடீரென அந்தக் கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
கோல்புள்ளி பகுதியில் உள்ள கட்டடத்தின் தரை தளத்தில் இன்று காலை தீ விபத்து நேரிட்ட போது, எதிர்பாராத விதமாக கட்டடம் இடிந்து விழுந்ததில், 5 தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஏராளமானோர் கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
இவர்களில் இரண்டு வீரர்களும் பொதுமக்களும் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டனர். மேலும் மூன்று தீயணைப்பு வீரர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இது குறித்து தீயணைப்புத்துறை சார்பல் கூறியிருப்பதாவது, இன்று காலை 4.48 மணிக்கு கட்டடத்தில் தீ விபத்து நேரிட்டதாக வந்த தகவலை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத வகையில் 5.30 மணியளவில் கட்டடம் இடிந்துவிழுந்து தரைமட்டமானது.
உடனடியாகக் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கிய 3 தீயணைப்பு வீரர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.