ஆஸ்கார் விருது
சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஜோக்கர் பட நாயகன், நடிகர் வாக்கீன் பீனிக்ஸ் பெற்றார். ஆஸ்கர் விருதுக்கு, 4வது முறையாக பரிந்துரைக்கப்பட்ட வாக்கீன் பீனிக்ஸ், முதல்முறையாக விருதை வென்றுள்ளார். சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை ஜூடி படத்தில் நடித்த ரென்னி வென்றார். 1917 திரைப்படம் 3 ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலிக்கலவை மற்றும் சிறந்த கிராஃபிக்ஸ் பிரிவுகளில், ஆஸ்கார் விருதுகளை வென்றது.
‘ஒன்ஸ் அப் ஆன் அ டைம் இன் ஹாலிவுட்’ திரைப்படத்திற்கு 2 ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருது மேரேஜ் ஸ்டோரி திரைப்படத்திற்காக லாரா டெர்ன்-க்கு வழங்கப்பட்டது.
சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது பாங் ஜூன் ஹோ-விற்கு “பாரசைட்” என்ற திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.தென் கொரிய படமான பாராசைட் 4 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த தழுவப்பட்ட திரைப்படத்திற்கான விருது தைக்கா வைத்திதிக்கு “ஜோ ஜோ ராபிட்” படத்திற்காக வழங்கப்பட்டது.சிறந்த ஆவணப் படத்திற்கான ஆஸ்கார் விருது அமெரிக்கன் ஃபேக்டரி திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கார் விருது லிட்டில் வுமன் திரைப்படத்திற்காக ஜாக்குலின் டுரனுக்கு வழங்கப்பட்டது.சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான ஆஸ்கார் விருது ‘ஒன்ஸ் அப் ஆன் அ டைம் இன் ஹாலிவுட்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
‘ஒன்ஸ் அப் ஆன் அ டைம் இன் ஹாலிவுட்’ திரைப்படத்திற்கு 2 ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருது மேரேஜ் ஸ்டோரி திரைப்படத்திற்காக லாரா டெர்ன்-க்கு வழங்கப்பட்டது.