இன்றைய ராசி பலன்கள் – 10-02-2020 – திங்கட்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம்
 பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு நற்பேறுகள் மற்றும் பாராட்டுகள் கிடைக்கும். தொழில் வட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு பெருகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். வாகனப் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் புரியும் இடத்தில் மேன்மையான சூழல் அமையும். 
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் :  3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : பாராட்டுகள் கிடைக்கும்.
பரணி : செல்வாக்கு பெருகும்.
கிருத்திகை : மேன்மை உண்டாகும்.
—————————————
ரிஷபம்
 தொழிலில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். தொழிலில் இழந்த பொருட்களை மீட்பதற்கான சாதகமான சூழல் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் உள்ள சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நீர்நிலை சம்பந்தமான பணியில் உள்ளவர்கள் கவனத்துடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : சாதகமான நாள்.
ரோகிணி : அனுசரித்து செல்லவும்.
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
—————————————
மிதுனம்
 இளைய சகோதரர்களின் மூலம் சுபச்செய்திகள் உண்டாகும். புதிய திட்டங்களை தைரியத்துடன் செயல்படுத்துவீர்கள். மறைமுக எதிரிகளின் செயல்பாடுகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : சுபிட்சமான நாள்.
திருவாதிரை : தைரியம் மேம்படும்.
புனர்பூசம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
—————————————
கடகம்
 பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆடைச்சேர்க்கையால் மகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். பிறருக்கு உதவும்போது கவனம் வேண்டும். விவாதங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தனவரவால் கடன்  பிரச்சனைகளை தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். 
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூசம் :  கவனம் வேண்டும்.
ஆயில்யம் : பிரச்சனைகள் குறையும்.
—————————————
சிம்மம்
 ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். பிள்ளைகளின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். சுபச்செய்திகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றமான சூழலை உருவாக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் நற்பெயர்கள் உண்டாகும். உயர்கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் :  9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மகம் : எண்ணங்கள் மேம்படும்.
பூரம் : மாற்றமான நாள்.
உத்திரம் : வாய்ப்புகள் ஏற்படும்.
—————————————
கன்னி
 கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். வாழ்க்கை பற்றிய புரிதல்  உண்டாகும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். மனைகளால் இலாபம் உண்டாகும். உறவினர்களின் ஆதரவால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தொழில் திறமைகள் வெளிப்படும். மூலிகைகளால் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : புரிதல் ஏற்படும்.
அஸ்தம் : இலாபம் உண்டாகும்.
சித்திரை : திறமைகள் வெளிப்படும்.
—————————————
துலாம்
 சபை தலைவர்களுக்கு ஆதரவுகள் பெருகும். வீண் செலவுகளை குறைத்து சேமிப்புகளை அதிகப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். திறமைகள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
சித்திரை : ஆதரவுகள் பெருகும்.
சுவாதி : முயற்சிகள் மேம்படும்.
விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும்.
—————————————
விருச்சிகம்
 வாதத்திறமையால் பொருள் இலாபம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் கலகலப்பான சூழல் ஏற்படும். செய்தொழிலில் புதிய திட்டங்களால் தனவரவு மேம்படும். நண்பர்களின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். தொழிலில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : கலகலப்பான நாள்.
அனுஷம் :  தனவரவு மேம்படும். 
கேட்டை : நம்பிக்கை அதிகரிக்கும்.
—————————————
தனுசு
 அறப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான நற்பெயர்கள் கிடைக்கும். பொதுநலம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். எதிர்காலம் சம்பந்தமான திட்டங்களுக்கான பணியில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர் பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் :  1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : நற்பெயர்கள் கிடைக்கும்.
பூராடம் : ஆர்வம் உண்டாகும்.
உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
—————————————
மகரம்
 நண்பர்களுடன் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி சம்பந்தமான அலைச்சல்கள் உண்டாகும். பணி செய்யும் இடங்களில் கோப்புகளை கையாளும்போது சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
உத்திராடம் : விவாதங்களை தவிர்க்கவும்.
திருவோணம் : அலைச்சல்கள் உண்டாகும்.
அவிட்டம் : விழிப்புணர்வு வேண்டும்.
—————————————
கும்பம்
  மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுமூகமான சூழ்நிலை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் நட்பு வட்டம் பெருகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அவிட்டம் :  தெளிவு கிடைக்கும்.
சதயம் : மனக்கசப்புகள் குறையும்.
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும். 
—————————————
மீனம்
 செய்யும் வேலையில் பதற்றமில்லாமல் நிதானத்துடன் செயல்படவும். தந்தையிடம் சற்று கனிவாக நடந்து கொள்ளவும். தொழில் சார்ந்த பயணங்களில் கவனம் வேண்டும். தாய்மாமன் உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். காரியங்களில் இருந்துவந்த தடைகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் :  6
அதிர்ஷ்ட நிறம் :  வெள்ளை நிறம்
பூரட்டாதி : நிதானம் வேண்டும்.
உத்திரட்டாதி : ஆதயம் உண்டாகும்.
ரேவதி : தடைகள் நீங்கும்.
————————————-

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...