எழுத்தாளர், பத்திரிக்கையாளர் சாவி
இன்று சாதனைகள் படைத்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர் சாவி நினைவு நாள்
பிப்ரவரி 9, 2001. நகைச்சுவை எழுத்தாளர்கள் என்று பட்டியல் இட்டால், கல்கி, தேவனுக்கு அடுத்தபடியாக நம் நினைவுக்கு வருபவர் சாவி அவர்கள்தான்.
ஆனந்த விகடனில் ‘சாவி’ எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’வாராவாரம் வாசகர்களை குலுங்கக் குலுங்கச் சிரிக்கச் செய்த இந்தக் கதை, சாவியின் மாஸ்டர் பீஸ் படைப்பாகவே ஆகிவிட்டது.
சா.விஸ்வநாதன் என்னும் தம் பெயரைத்தான் சுருக்கி சாவி எனப் புனைபெயராகச் சூட்டிக்கொண்டார் சாவி.
பின்னாளில் இதே பெயரில்தான் பத்திரிகை தொடங்கி நடத்தினார். ஆனந்த விகடன், தினமணிக்கதிர், குங்குமம் ஆகிய பத்திரிகைகளில் சாவி ஆசிரியராகப் பணியாற்றியது பலருக்கும் தெரிந்திருக்கும்.
வெள்ளிமணி, சாவி பத்திரிகைகள் தவிர, மோனா, சுஜாதா, திசைகள், பூவாளி, விசிட்டர் லென்ஸ் ஆகிய பத்திரிகைகளையும் சாவி சொந்தமாகத் தொடங்கி நடத்தியுள்ளார். இவற்றில் ‘திசைகள்’, பத்திரிகை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல் ‘பூவாளி’, ஆங்கில ரீடர்ஸ் டைஜஸ்ட்டுக்கு இணையான தமிழ்ப் பத்திரிகையாக விளங்கியது.
சாவி தொடங்கிய விசிட்டர் லென்ஸ் பத்திரிகைதான் இன்றைய இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ பத்திரிகைகளுக்கெல்லாம் முன்னோடி என்று சொன்னால் மிகையாகாது.
இதன் ஆசிரியராக இருந்தவர்தான் பின்னர் ‘விசிட்டர் அனந்த்’ என்று அடைமொழியோடு அழைக்கப்பட்டார்