ஆண்ட்ராய்டு போன்களில் புதிய அம்சத்துடன் கூகுள் மொழிபெயர்ப்பு செயலி!
ஆண்ட்ராய்டு போன்களில் மொழிபெயர்ப்பு பயன்பாட்டிற்கு லைவ் டிரான்ஸ்கிரிப்ஷனைக் கொண்டுவர கூகுள் முயற்சி செய்து வருகிறது.
கூகுள் நிறுவனத்தின் பிரபல செயலிகளின் பட்டியலில் கூகுள் டிரான்ஸ்லேட் செயலி முதல் இடத்தில் உள்ளது. இணையத்தில் 103 மொழிகளுக்கு இந்த செயலி மொழியாக்கம் செய்து தருகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் மொழிபெயர்ப்பு பயன்பாட்டில் நேரடி டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சத்தை கொண்டு வருகிறது. கூகுள் தனது சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் இதற்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்த அம்சத்தின் மூலமாக பயனர் ஒரு மொழியில் ஒரு பக்கம் ஆடியோவைப் பதிவுசெய்ய, மறுபக்கம் தேவையான மற்றொரு மொழியில் மொழி பெயர்த்து கொடுக்கும். முதற்கட்டமாக இந்த லைவ் டிரான்ஸ்கிரிப்ஷன் வசதி, ஆடியோவை வைத்து சோதனை முயற்சி செய்யப்படுகிறது மேலும், அது ஸ்மார்ட்போன் மைக்ரோஃபோன் மூலம் வழங்கப்படும் நேரடி ஆடியோவாக இருக்க வேண்டும். அல்லது பதிவு செய்யப்பட்ட ஒரு ஆடியோவை ஸ்பீக்கர் மூலம் இயக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.