நாளைய தமிழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் – திவாகரன் பேச்சு
இன்று தமிழ்நாட்டின் நிலை மிக கேவலமாக உள்ளது. தமிழர்கள் இரண்டாம் தர நிலையில் நடத்தப்படுகிறோம் – திவாகரன்.
கன்னடத்திலிருந்து வந்த ஒருவர், பெரியாரை பேசும் அளவிற்கு இன்று துணிச்சல் வந்துள்ளது – திவாகரன் .
திராவிட தலைவர்கள் ஒருவர், ஒருவராக மறைந்ததால் இந்த நிலை வருகிறது. தமிழ், தமிழகம் தான் நமக்கு முதல் முக்கியம். அதை காப்பவர்களுக்கு பின் நாம் நிற்க வேண்டும்.
தமிழகத்தில் திராவிட பாரம்பரியத்தை காக்க வேண்டும். அதை காக்கும் ஒரே சக்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான்.
அரசியலில் நான் எதையும் எதிர்பார்க்க மாட்டேன். சிலருக்கு இடைஞ்சல் செய்வதற்காகவே அசியலுக்கு வந்தேன்.
85% திமுகவின் வெற்றியே உள்ளாட்சி தேர்தலில் உறுதி செய்யப்பட்டிருந்தது. அதில் பெரும்பாலும் ஆளுங்கட்சியால் தட்டி பறிக்கப்பட்டிருக்கிறது – தஞ்சை எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் இல்ல மணவிழாவில் திவாகரன் பேச்சு.
மு.க.ஸ்டாலின் பேச்சு:
உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றி என்பது, சட்டசபை தேர்தலில் பெறப்போகும் வெற்றிக்கான முன்னோட்டம் – மு.க.ஸ்டாலின்.
ஏழை எளிய மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் இந்த ஆட்சிக்கு இல்லை.
மத்திய அரசு கொண்டு வரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்க்கிறது மாநில அரசு – மு.க.ஸ்டாலின்.
ஆளும் அரசு என் மீது எத்துனை வழக்குகள் போட்டாலும் அதை சந்திக்க தயார் – தஞ்சையில் மு.க.ஸ்டாலின் பேச்சு.