கரோனா வைரஸ்: கேரள சுற்றுலாத்துறையின் புதிய விதிகள் அறிமுகம்

  கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு வேகமாகப் பரவும் சூழலில் கேரள சுற்றுலாத்துறை புதிய விதிகளை திங்கள்கிழமை அறிமுகம் செய்துள்ளது. சுற்றுலா வளர்ச்சித்துறை, விடுதி நிர்வாகம் உள்ளிட்டவற்றுடன் கலந்து ஆலோசித்த பிறகு இந்த விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதற்கான சுற்றறிக்கையும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  அதில், சீனாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக சளி, இருமல், தொண்டைக் கோளாறு, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பவர்களை தீவிரமாக கண்காணிப்பது. சுற்றுலா வந்த நோக்கத்தின் முழு விவரங்களைப் பெற்று அதனை சுற்றுலாத்துறையிடம் சமர்பிப்பது போன்றவை இடம்பெற்றுள்ளன.

  மேலும் கூடுதல் விவரங்களுக்காக எந்த நேரத்திலும் தொடர்புகொள்ள திஷா என்ற உதவி எண்களும் ( 0471 2552056 அல்லது 1056) அறிவிக்கப்பட்டுள்ளன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!