இன்றைய ராசி பலன்கள் – 29%-01-2020 – புதன்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம்

 விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும். உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். நிர்வாகத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஈடுபடுபவர்களுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும். உறவுகளின் மூலம் சுபச்செய்திகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : கவனம் வேண்டும்.
பரணி : பிரச்சனைகள் குறையும்.
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
—————————————
ரிஷபம்
 தொழிலில் மேன்மையான புதிய சூழல் மற்றும் வாய்ப்புகள் உண்டாகும். ஆன்மிக வழிபாட்டில் மனம் ஈடுபடும். தொழில் சார்ந்த முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். கடல் மார்க்க பயணங்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.
ரோகிணி : அனுகூலமான நாள்.
மிருகசீரிஷம் : தனலாபம் உண்டாகும்.
—————————————
மிதுனம்
 புதிய அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். கடல் மார்க்க பயணங்களால் இலாபம் உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாகும். இறைவழிபாட்டால் மனத்தெளிவு கிடைக்கும். விவாதம் புரிதலில் எச்சரிக்கையுடன் இருக்கவும். வாக்குறுதிகளை காப்பாற்றுவதற்கான சூழல்கள் உண்டாகும். புனித யாத்திரைக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேலோங்கும்.
திருவாதிரை : தெளிவு கிடைக்கும்.
புனர்பூசம் : எச்சரிக்கை வேண்டும்.
—————————————
கடகம்
 தந்தையிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். நண்பர்களால் சுபவிரயம் ஏற்படும். எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். உயர் பதவி பெறுவதற்கான சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். இழந்த பொருட்களை மீட்பதற்கான தன உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
புனர்பூசம் : சுபவிரயம் ஏற்படும்.
பூசம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.
—————————————
சிம்மம்
 பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். வெளியூர் பயணங்களால் மத்திமமான பலன்கள் உண்டாகும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் விவாதங்களை தவிர்க்கவும். பணிகளில் மந்தத்தன்மையால் சாதகமற்ற சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மகம் : நிதானத்துடன் இருக்கவும்.
பூரம் : முடிவுகள் காலதாமதமாகும்.
உத்திரம் : சாதகமற்ற நாள். 
—————————————
கன்னி
 கூட்டாளிகளிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்களின் மூலம் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். வாகனப் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவால் பூர்வீகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : விவாதங்களை தவிர்க்கவும்.
அஸ்தம் : அனுகூலமான நாள்.
சித்திரை : பிரச்சனைகள் குறையும்.
—————————————
துலாம்
 புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் வந்தடையும். உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். தைரியம் மற்றும் நிதானத்துடன் மனதில் எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 
சித்திரை : சுபச்செய்திகள் வந்தடையும்.
சுவாதி : எண்ணங்கள் ஈடேறும்.
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
—————————————
விருச்சிகம்
 தொழில் திறமையில் புத்திக்கூர்மை வெளிப்படும். நீர் வள மேலாண்மையால் மேன்மை உண்டாகும். பொதுத்தொண்டின் மூலம் கீர்த்தி உண்டாகும். தாய்வழி உறவுகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தூர தேச பயணங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். மனைகளால் சுபவிரயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
அனுஷம் : கீர்த்தி உண்டாகும்.
கேட்டை : சிக்கல்கள் குறையும்.
—————————————
தனுசு
 வாகனப் பயணங்களால் இலாபம் ஏற்படும். தாய்வழி உறவுகளால் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். கடிதத்தின் மூலம் சாதகமான செய்திகள் கிடைக்கும். புதிய முயற்சிகளால் சேமிப்பு உயரும். மனக்கவலைகள் குறைவதற்கான சூழல் உண்டாகும். பணிகளில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் 
மூலம் : இலாபம் உண்டாகும்.
பூராடம் : சேமிப்பு உயரும்.
உத்திராடம் : மேன்மையான நாள்.
—————————————
மகரம்
 சாதுர்யமான பேச்சுக்களால் பாராட்டப்படுவீர்கள். நண்பர்களுடன் விருந்தில் கலந்து கொள்வீர்கள். செய்யும் வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும். புதிய உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : பாராட்டப்படுவீர்கள்.
திருவோணம் : மகிழ்ச்சி உண்டாகும்.
அவிட்டம் : வாய்ப்புகள் ஏற்படும்.
—————————————
கும்பம்
  அருள் தரும் வேள்விகளில் பங்கேற்பீர்கள். வாக்குவன்மையால் பொருளாதார நிலை உயரும். உறவினர்களுடன் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள். கால்நடைகளிடம் கவனமாக இருக்கவும். வேளாண்மையில் ஏற்பட்ட தேக்கநிலை நீங்கும். இறைப்பணிக்காக நன்கொடைகள் கொடுத்து மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அவிட்டம் : பொருளாதாரம் மேம்படும்.
சதயம் : தேக்கநிலை நீங்கும்.
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
—————————————
மீனம்
 பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மனக்குழப்பத்தால் வேலையில் மந்தத்தன்மை உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். சுபகாரியங்களுக்கான முயற்சிகள் கைகூடும். அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான தகவல்கள் வந்தடையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும். 
உத்திரட்டாதி : முயற்சிகள் கைகூடும்.
ரேவதி : அனுகூலமான நாள்.
————————————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!