“இன்றைய தினத்தின் சில முக்கிய நிகழ்வுகள்”
சர்வதேச சகிப்புத் தன்மை தினம்
நவம்பர் 16 கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்க, ஐ.நா.வின் ஓர் அங்கமாக யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வண்ணம், வருங்காலத் தலைமுறையினரை கருத்தில் கொண்டு, அகில உலக சகிப்புத்தன்மை நாள் கடைபிடிக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் 1995ம் ஆண்டு ஐ.நா. பொது அவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த உறுதிமொழியின்படி 1996ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 16ம் தேதி சர்வதேச உலக சகிப்புத் தன்மை நாளாகக் கடைபிடிக்கப்படுகின்றது.
ஊமைத்துரை காலமான தினம் இன்று!
ஜெகவீரகட்டபொம்மனின் மகனாக, 1772ல் பிறந்தவர் குமாரசாமி. பேசும் திறன் குறைவாக இருந்ததால் மக்கள் இவரை, ‘ஊமைத்துரை’ என்றழைத்தனர். திட்டம் தீட்டுவதில் வல்லவராகவும், வீரமும், துணிச்சலும் மிகுந்தவராகவும் இருந்தார்.இவரது அண்ணன், பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரராக இருந்த வீரபாண்டிய கட்டபொம்மன். ஆங்கிலேயருக்கு வரி கட்ட மறுத்ததால், போர் ஏற்பட்டது. -1799ல் ஆங்கிலேய அரசால், கட்டபொம்மன் துாக்கிலிடப்பட்டார். சிறையில் இருந்த ஊமைத்துரையை, அவரது ஆதரவாளர்கள் சண்டையிட்டு மீட்டனர். மருது சகோதரர்களுடன் இணைந்து, ஆங்கிலேயரை எதிர்த்தார். பல இடங்களுக்கு தப்பிச் சென்றவர், இறுதியில் சிறை பிடிக்கப்பட்டார். ஆங்கிலேய அரசால், 1801 நவம்பர் 16ல், தன் 30வது வயதில் பாஞ்சாலங்குறிச்சி பீரங்கி மேட்டில் துாக்கிலிடப்பட்டார்.
உலக நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் நாள்
நவம்பர் 16 (World Chronic Obstructive Plumonary Digsease Day) நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் சுமார் 210 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு 2007ஆம் ஆண்டு கணித்துள்ளது. புகையிலை, ரசாயனப் புகை, காற்று மாசுபாடு போன்ற பல காரணங்களால் 2030ஆம் ஆண்டி ல் உலகளவில் இந்த நோயால் அதிக மரணம் ஏற்படப் போகிறது என எச்சரித்துள்ளது. இந்நோய் பற்றிய புரிதலை மக்களிடம் ஏற்படுத்த 2002ஆம் ஆண்டில் இத்தினம் அறிவிக்கப்பட்டது.
யுனெஸ்கோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட நாள்
நவம்பர் 16 ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO), ஐக்கிய நாடுகள் சபையின் (UNO) முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று. 1945 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி உருவான இந் நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே, கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது. மேற்படி துறைகள், மனித மனங்களில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதான நோக்கத்தை அடைவதற்கான வழியாக இருக்கின்றன என்ற அடிப்படையைக் கொண்டே இந் நிறுவனம் இயங்கி வருகின்றது. இவ்வகையான ஒத்துழைப்பினால் உலகில் அமைதியையும், பாதுகாப்பையும் ஏற்படுத்தி, அதன் மூலம் இன, மொழி, மத, பால் வேறுபாடின்றி, உலக மக்கள் அனைவருக்குமான நீதி, சட்ட விதிமுறைகள், மனித உரிமைகள், மற்றும் ஐக்கிய நாடுகள் உரிமை ஆவணத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் அடிப்படை சுதந்திரம் ஆகியவற்றிற்கு உலகளாவிய ரீதியில் கிடைக்கும் மதிப்பை உறுதி செய்வதே இவ்வமைப்பின் நோக்கமாகும்.
திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை காலமான தினமின்று
கச்சேரியில் இரு நாதசுவரங்களை இணைந்து வாசிக்கும் வழக்கத்தைக் கொண்டுவந்தவர்கள் திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை – சிவசுப்பிரமணிய பிள்ளை சகோதரர்கள் ஆவர். புகழ்பெற்ற தவில் கலைஞர்களான ஸ்ரீவாஞ்சியம் கோவிந்தப் பிள்ளை, மன்னார்குடி பல்லுப் பக்கிரிப் பிள்ளை, அம்மாப்பேட்டை பக்கிரிப்பிள்ளை, வழிவூர் முத்துவீர் பிள்ளை ஆகியோர் இச்கோதரர்களுக்கு தவில் வாசித்துள்ளனர். தீட்சிதர் கீர்த்தனைகளில் 50 பாடல்களை தீட்சிதர் கீர்த்தனப் பிரகாசிகை எனும் பெயரில் நூலாக நடராஜசுந்தரம் பிள்ளை வெளியிட்டார்]. முறையான பாட அமைப்பினை இந்த நூல் கொண்டிருந்தது. பிரபல புல்லாங்குழல் கலைஞர் திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளை, நடராஜசுந்தரத்தின் மூத்த மகனாவார்.
ஜான் பிளமிங் வெற்றிடக் குழாயைக் கண்டுபிடித்த நாள்
இதே நவம்பர் 16 ஜான் பிளமிங் வெற்றிடக் குழாயைக் கண்டுபிடித்த நாள்(1904) vacuum tube was invented by john fleming(1904)
‘ஹோக்சென் புதையல்’ கண்டுபிடிக்கப்பட்ட நாள்.
இதே நவம்பர் 16 1992 இங்கிலாந்தில் கிடைத்துள்ள ரோமானிய காலத்துப் புதையல்களிலேயே பெரியதான, ‘ஹோக்சென் புதையல்’, எரிக் லாவ்ஸ் என்பவரால், ஹோக்சென் என்ற இடத்தில், மெட்டல் டிட்டெக்டர்மூலம் கண்டுபிடிக்கப்பட்ட நாள்.
இதில் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய உலோகங்களாலான 14,865 நாணயங்களும், 200க்கும் மேற்பட்ட தங்க நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள் ஆகியவையும் இருந்தன. இவை லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. உலகப்புகழ்பெற்ற ‘பேரரசி மிளகுக் குடுவை’என்ற வெள்ளியாலான, தங்கமுலாம் பூசப்பட்ட பெண் வடிவப் பாத்திரமும் இந்தப் புதையலில்தான் கிடைத்தது. முதலில் பேரரசி என்று பெயரிடப்பட்டாலும், அது ரோமப் பேரரசிகளைப் போன்ற உருவத்திலில்லை என்று பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிளகு உள்ளிட்ட, விலை உயர்ந்த மணமூட்டிகள், ரோமப் பேரரசில் இத்தகைய விலை உயர்ந்த பாத்திரங்களில்தான் வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டதால் இவை மிளகுக் குடுவை என்றழைக்கப்படுகின்றன.
முதன்முதலில் கண்டெடுக்கப்பட்ட இத்தகைய பாத்திரத்தில், படிமமாகிப்போன மிளகு இருந்ததால், இவற்றின் பெயரில் மிளகு இடம்பெற்றுவிட்டது. ரோமப் பேரரசால் கைப்பற்றப்பட்ட இங்கிலாந்து, கி.பி.43இலிருந்து 410வரை அதன் மாநிலமாக இருந்தது. இக்காலத்தில், பின்னாளில் எடுத்துப் பயன்படுத்துவதற்காக பெரும் செல்வந்தர்களும், திருட்டுப் பொருட்களை மறைப்பதற்காக திருடர்களும், சமயச் சடங்குகளில் தெய்வங்களுக்குக் காணிக்கையாகவும் இத்தகைய புதையல்களைப் புதைத்துள்ளனர். இங்கிலாந்தில், இவவாறு சுமார் 1,200 இடங்களில், ரோமப் பேரரசின் காலத்திய புதையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ரோமப் பேரரசின் காலத்தியவை மட்டுமின்றி, பிற்காலத்திய ஆங்கிலோ-சாக்சன் காலம், பண்டைய செம்பு, இரும்பு காலம் ஆகியவற்றைச் சேர்ந்த புதையல்களும் இங்கிலாந்தில் கிடைத்துள்ளன. நிலத்தடி புதையல் வேட்டையாடுபவர்கள், மெட்டல் டிட்டெக்டர்மூலம் கண்டறிந்து, புதையலுக்காகத் தோண்டுவதன்மூலம், பண்டைய காலத்தில அரிய சின்னங்களை சிதைத்து விடுகிறார்கள் என்பதால், மெட்டல் டிட்டெக்டரைப் பயன்படுத்துவதை, ஆய்வாளர்கள் பொதுவாக ஏற்பதில்லை. ஆனாலும், இங்கிலாந்தில், நிலத்தின் உரிமையாளருக்கு அவ்வாறு தேடும் உரிமை உள்ளது. 1996இல் இயற்றப்பட்ட புதையல் சட்டத்தால் புதையல் என்று வரையறுக்கப்பட்டுள்ளவற்றை மட்டும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு வரையறுக்கப்படாத பொருட்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தால், அதைக் கண்டெடுத்தவர் விரும்பினால் அரசுக்குத் தெரிவித்து, ஒப்படைக்கலாம்.
ஜோஸ் டிசோஸா சரமாகூ. பிறந்த தினமின்று
இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற போர்ச்சுக்கீசிய எழுத்தாளர் ஜோஸ் டிசோஸா சரமாகூ 1922ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி போர்ச்சுக்கல் நாட்டின் ரீபாட்டஜோ மாகாணத்திலுள்ள அசின்ஹாகா என்ற கிராமத்தில் பிறந்தார்.
இவரது முதல் நூலான ‘லேண்ட் ஆஃப் சின்’ 1947ஆம் ஆண்டு வெளியானது. 1950ஆம் ஆண்டின் இறுதியில் புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் பணியாற்ற தொடங்கினார். இதன் மூலம் இவருக்கு பிரபல எழுத்தாளர்களின் அறிமுகம் கிடைத்தது.
இவர் 1966ஆம் ஆண்டு ‘பாஸிபிள் போயம்ஸ்’ என்ற கவிதை நூலை வெளியிட்டார். தொடர்ந்து, ‘பிராபப்ளி ஜாய்’, ‘திஸ் வேர்ல்டு அண்ட் தி அதர்’, ‘டிராவலர்ஸ் பேக்கேஜ்’ ஆகிய நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
இவர் எழுதிய ‘பால்டாஸர் அண்ட் ப்ளிமுண்டா’ என்ற நாவல் உலக அளவில் அங்கீகாரத்தையும், வாசகர்களையும் தந்தது. இந்த நாவலுக்கு போர்ச்சுக்கீசிய பென் கிளப் விருது கிடைத்தது. 1980ஆம் ஆண்டில் நாவல்கள், சிறுகதைத் தொகுப்பு, நாடகங்கள் என ஏராளமான படைப்புகளை எழுதினார்.
இவருடைய உலகப் புகழ்பெற்ற நாவலான ‘பிளைண்ட்னஸ்’ (டீடiனெநௌள) 1995ஆம் ஆண்டு வெளிவந்தது. 1998ஆம் ஆண்டு இவர் இலக்கியத்திற்காக நோபல் பரிசை பெற்றார். ஜோஸ் டிசோஸா சரமாகூ 2010ஆம் ஆண்டு மறைந்தார்.