‘தேசிய பத்திரிகை தினம்’ இன்று..!

 ‘தேசிய பத்திரிகை தினம்’ இன்று..!

பத்திரிகையாளர்களுக்கான அமைப்பான பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நிறுவப்பட்ட தினமான நவம்பர் 16 ஆம் தேதியைத்தான் தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடி வருகின்றனர். கருத்து சுதந்திரம் என்பது ஒவ்வொரு மனிஷனோட அடிப்படை உரிமை. மேலும், எந்தவித இடையூறும் இல்லாமல் ஒரு கருத்தைக் கொண்டிருக்கவும் தகவல்களை கோரவும் பெறவும் மட்டுமின்றி எந்தவித எல்லைக்கும் உட்படாமல் தகவல்களையும் கருத்துக்களையும் எந்தவொரு ஊடகத்தின் வாயிலாகப் பெறுவதும் இந்த உரிமைக்கு உட்பட்டதாகும்” என ஐ.நா.வின் மனித உரிமைப் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக.. ஒவ்வொரு மனிதனுக்கும் எப்படி வாழ்வுரிமை, சுதந்திரம், பாதுகாப்பு ஆகியவை அடிப்படை உரிமையாக உள்ளதோ அதே அளவிற்கு கருத்து சுதந்திரம் முக்கியமானதாக உள்ளது. கருத்து சுதந்திரம் முழுமையாக உறுதிப்படுத்தப்படும் நாட்டில்தான் ஜனநாயகம் உண்மையாக தழைத்தோங்குகிறது. அதனால்தான் பத்திரிக்கைகளை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்கிறோம். பத்திரிக்கை சுதந்திரம் ஒரு நாட்டில் எந்த அளவிற்கு உள்ளதோ அந்த அளவிற்கு அந்த நாட்டில் கருத்து சுதந்திரம் உள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

ஆனால், உலகம் முழுவதும் ஒவ்வொரு நாலு நாட்களுக்கும் ஒரு பத்திரிகையாளர் கொல்லப்படுகிறார் என யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் பத்திரிகைகள் வளர்ச்சியில் அக்கறைக் காட்டாத நாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறதாம்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...