மின்கைத்தடியின் அண்மைச் செய்திகள்

 மின்கைத்தடியின் அண்மைச் செய்திகள்

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்திருப்பது ஆய்வில் உறுதியானது; ஆற்று மண்ணை சோதித்ததில் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக கழிவுநீர் கலந்திருந்தது என ஐகோர்ட் மதுரைக்கிளையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே நாளை 17-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை புறநகர் ரயில்கள் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பல்லாவரம்-கடற்கரை இடையே பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சி, திருமால்பூர், அரக்கோணம் செல்லும் ரயில்கள் அட்டவணைப்படி இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு மதிப்பூதியம் வழங்க, 171 கோடியே, 89 லட்சத்து, 11,407 ரூபாயை, தமிழக அரசு விடுவித்துள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் எண்ணிக்கைக்கேற்ப சமர்ப்பிக்கப்பட்ட கேட்பு பட்டியல் சரிபார்க்கப்பட்டு, நிதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம், 171 கோடியே, 89 லட்சத்து, 11,407 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், சென்னைக்கு, 10.12 கோடி, மதுரைக்கு 8.06 கோடி, கோவைக்கு, 7.84 கோடி, திருப்பூருக்கு, 5.61 கோடி, நீலகிரிக்கு 1.98 கோடி ரூபாய் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் பதவி மற்றும் பணியிடத்துக்கு ஏற்ப, 5,000 ரூபாய் முதல் 33,000 ரூபாய் வரை மதிப்பூதியம் கிடைக்கும். நிதி ஒதுக்கி, அரசாணை வெளியாகி விட்டதால், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

சபரிமலை பயணம் மேற்கொள்ளும் தமிழக அய்யப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக, அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில், 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தகவல் மையம் வரும் ஜன., 24 வரை செயல்படும். தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள், இத்தகவல் மைய சேவையை, 044 – -2833 9999, 1800 425 1757 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் வாயிலாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா. நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அபாரம்.

ரயிலின் AC முதல் வகுப்பு பெட்டிகளில் செல்ல பிராணிகளை உடன் அழைத்துச் செல்வதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே நிர்வாகம் தொடங்கிருப்பது பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது ரயில் பயணத்திற்கு 3 மணி நேரம் முன்பே செல்லப்பிராணியை ரயில் நிலையம் அழைத்துச்செல்ல வேண்டும், அனைத்து தடுப்பூசிகளையும் செலுத்திய சான்றிதழ்களைக் காண்பித்தல் அவசியம். கடந்த மே மாதம் தொடங்கப்பட்ட இந்த வசதியை இதுவரை 700க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தியுள்ளனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...