இந்திரா சௌந்தர்ராஜன்….
இந்திரா சௌந்தர்ராஜன்….
*
இன்னும் மூன்று நாட்களில் (13 நவம்பர்) உங்களுக்கு நான் பிறந்தநாள் வாழ்த்து எழுதியிருக்க வேண்டும். இப்படி ஒரு அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லை சார். இதை நம்பவும் முடியவில்லை.
எதிர்பாராத திருப்புமுனைகளைத் தந்துகொண்டே இருந்தீர்கள்… இப்போதும் தந்து விட்டீர்கள்.
இணைந்து ஒரு முறை பணியாற்ற வேண்டும் என்று நினைத்தோம்.
ஆனால் ‘எழுதிச் செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும்…’ என்று நினைத்துக்கொள்வதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும் இப்போது ?
நம்ப முடியாத எத்தனையோ சம்பவங்களை
நம்ப வைத்த கதைகள் உங்களுடையவை. அதுவே இன்றும் நடந்திருக்கிறது.
தொலைக்காட்சிகளில் ‘மர்ம தேசம்’, ‘விடாது கருப்பு’ போன்ற உங்கள் தொடர்கள் வெளிவந்தபோது நாடு முழுவதும் பதற்றம் பற்றிக் கொண்டிருக்கும். அதே பதற்றம் இச்செய்தியைக் கேட்டபோதும்.
எழுத்து , பேச்சு, தொலைக்காட்சி, திரைப்படம் என எல்லா ஊடகங்களிலும் தடம் பதித்து வந்தீர்கள்.
உங்கள் வாழ்க்கை ஒரு வெற்றிப் பயணம்! அதில் சந்தேகமில்லை. போய் வாருங்கள் !
மின் பிம்பங்களிலும் எம் நெஞ்சங்களிலும் உங்கள் சுவடுகள் நீண்ட நாள் நிலைபெற்று இருக்கும்.
வணக்கம் சார்!
*