வரலாற்றில் இன்று (01.11.2024 )

 வரலாற்றில் இன்று  (01.11.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

நவம்பர் 01 (November 01) கிரிகோரியன் ஆண்டின் 304 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 305 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 61 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1520 – தென் அமெரிக்காவில் மகலன் நீரிணை மகலனால் கண்டுபிடிக்கப்பட்டது.
1592 – கொரியக் கடற்படையினர் பூசான் என்ற இடத்தில் மிகப்பெரும் ஜப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர்.
1604 – ஷேக்ஸ்பியரின் ஓத்தெல்லோ நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது.
1611 – ஷேக்ஸ்பியரின் த டெம்பெஸ்ட் நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது.
1755 – போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 60,000-90,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
1805 – முதலாம் நெப்போலியன் ஆஸ்திரியாவை முற்றுகையிட்டான்.
1814 – நெப்போலியனின் பிரான்ஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஐரோப்பாவின் எல்லைகளை மீளவரையும் பொருட்டு வியென்னா காங்கிரஸ் கூடியது.
1876 – நியூசிலாந்தின் மாகாண சபைகள் கலைக்கப்பட்டன.
1894 – ரஷ்யாவின் மூன்றாம் அலெக்சாண்டர் இறந்ததை அடுத்து இரண்டாம் நிக்கலாஸ் மன்னனானான்.
1904 – இலங்கையின் வட மாகாணத்துக்கான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. இது அநுராதபுரம் வரை சேவையில் ஈடுபட்டது.
1911 – இத்தாலிக்கும் துருக்கிக்கும் இடையில் இடம்பெற்ற போரில் முதற்தடவையாக விமானத்தில் இருந்து குண்டுகள் வீசப்பட்டன.
1914 – முதலாம் உலகப் போர்: சிலியில் ஜெர்மனியக் கடற்படையுடன் நடந்த மோதலில் பிரித்தானியக் கடற்படையினர் முதன் முதலில் தோல்வியடைந்தனர்.
1918 – மேற்கு உக்ரேன் ஆஸ்திரிய-ஹங்கேரிப் பேரரசிடம் இருந்து விடுதலை பெற்றது.
1922 – ஒட்டோமான் பேரரசின் கடைசி சுல்தான் ஆறாம் மெகமெட் பதவியிழந்தான்.
1928 – துருக்கிய மொழி சீர்திருத்தம் ஏற்பட்டது. அரபு எழுத்துக்கள் புதிய துருக்கிய எழுத்துக்களாக மாற்றப்பட்டன.
1948 – சீனாவின் மஞ்சூரியா என்ற இடத்தில் சீனக் கப்பல் வெடித்து மூழ்கியதில் 6,000 பேர் கொல்லப்பட்டனர்.
1950 – புவேர்ட்டோ ரிக்கோ தேசியவாதிகள் அமெரிக்கத் தலைவர் ஹரி ட்ரூமனை கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.
1951 – நெவாடாவில் அணுகுண்டு வெடிப்புச் சோதனையில் அமெரிக்கப் படைகள் ஈடுபடுத்தப்பட்டனர்.
1954 – புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது.
1956 – நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திரப் பிரதேசம் என்ற மாநிலமாக்கப்பட்டது.
1956 – இந்தியாவில் மைசூர், கேரளம், மதராஸ் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
1956 – இந்தியாவில் கன்னியாகுமரி பிரதேசம் கேரள மாநிலத்தில் இருந்து பிரிந்து தமிழ்நாடு மாநிலத்துடன் புதிய மாவட்டமாக இணைந்தது.
1957 – அக்காலத்தில் உலகின் மிக நீளமான தொங்கு பாலமான மக்கினா பாலம் மிச்சிகன் மாநிலத்தில் அமைக்கப்பட்டது.
1970 – பிரான்சில் நடன மாளிகை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 144 பேர் கொல்லப்பட்டனர்.
1973 – மைசூர் மாநிலம் கர்நாடகா என மாற்றப்பட்டது.
1981 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து அன்டிகுவா பர்புடா விடுதலை பெற்றது.
1993 – ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.
1998 – மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
1999 – ஓயாத அலைகள் மூன்று இராணுவ நடவடிக்கையின் முதலாவது கட்டம் புலிகளால் தொடங்கப்பட்டது.
2006 – பெங்களூர் நகரின் பெயர் பெங்களூரு என மாற்றப்பட்டது.

பிறப்புகள்

1762 – ஸ்பென்சர் பேர்சிவல், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 1812)
1916 மோகன் குமாரமங்கலம் இந்திய அரசியல்வாதி (இ. 1973
1970 – கப்டன் மயூரன், விடுதலைப் புலிப் போராளி (இ. 1993)
1973 – ஐஸ்வர்யா ராய், இந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1959 – தியாகராஜ பாகவதர், தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர் (பி. 1910).
1996 – ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா, இலங்கையின் முதலாவது ஜனாதிபதி (பி. 1906)

சிறப்பு நாள்

புனிதர் அனைவர் பெருவிழா
அன்டிகுவா பர்புடா – விடுதலை நாள் (1981)
அல்ஜீரியா – தேசிய நாள்

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...