இந்தியாவில் வெளியாகிறது.. Samsung Galaixy Note 10 Lite..!
Samsung ரசிகர்கள் யாரவது இருக்கீங்களா..?!
Galaxy S10 Lite உடன் Samsung Galaxy Note 10 Lite கடந்த வாரம் உலகளவில் வெளியிடப்பட்டது. இப்போது, இந்திய விற்பனையாளர் விஜய் சேல்ஸ் இணையதளத்தில் வரவிருக்கும் போனைப் பற்றி பேனர் வெளியிடப்பட்டுள்ளது. Samsung Galaxy Note 10 Lite விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது Galaxy Note 10 ஸ்மார்ட்போனின் watered-down பதிப்பாகும். இது மலிவு விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் Galaxy Note 10 Lite-ன் விலையும் சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் Samsung Galaxy Note 10 Lite-ன் ஆரம்ப விலை ரூ. 35,990-யாக அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் Galaxy Note 10-ஐப் போலவே S Pen stylus-ம், பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது. Galaxy Note 10-ல் உள்ளதைப் போலவே Samsung Galaxy Note 10 Lite-ம் டிஸ்ப்ளேவின் மையத்தில் punch hole உடன் ஒரு hole-punch டிஸ்ப்ளே உள்ளது. Samsung, இந்த ஸ்மார்ட்போனை 6GB RAM மற்றும் 8GB RAM என இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஸ்டோரேஜ் 128GB உள்ளது. அடிப்படை வேரியண்ட் ரூ. 35,990-யாகவும், உயர் வேரியண்டின் விலை ரூ. 39.990-யாகவும் விலையிடப் பட்டுள்ளது. இதற்கு மாறாக, இந்தியாவில் Samsung Galaxy Note 10-ன் விலை ரூ. 69,999 ஆகும்.