இன்றைய முக்கிய செய்திகள்
வட்டார கல்வி அலுவலர் பணி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 21ம் தேதி வரை நீட்டிப்பு – ஆசிரியர் தேர்வு வாரியம். போட்டித் தேர்வுகள் பிப்.15 ,16ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு.
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தவறான கருத்துகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன பாகிஸ்தானில் இருந்து வந்த 600 முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது – மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.
பெங்களூருவில் பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது. ஜார்க்கண்டின் தன்பாத்தில் தலைமறைவாக இருந்த ருஷிகேஷ் தேவ்திகாரை தனிப்படை போலீஸ் கைது செய்தது.
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தலைமையின் கீழ் 2 இணை செயலாளர்கள், 13 துணை செயலாளர்கள், 22 செயலாளர்கள் செயல்படுவார்கள் என அறிவிப்பு.
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தலைமையின் கீழ் 2 இணை செயலாளர்கள், 13 துணை செயலாளர்கள், 22 செயலாளர்கள் செயல்படுவார்கள் என அறிவிப்பு.
உச்சநீதிமன்றம் அதிரடி – ஜம்மு காஷ்மீரில் இணையதள முடக்கத்தை திரும்பப்பெறுவது பற்றி 7 நாளில் பரிசீலக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை. காஷ்மீரில் பிறப்பிக்கப்பட்டு உள்ள 144 தடை உத்தரவுகள் அனைத்தையும் ஒரு வாரத்தில் மறுஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் ஆணை.
இணையதளத்தின் மூலம் கருத்துக்கள் தெரிவிப்பது அடிப்படை உரிமை. தனிநபர் சுதந்திரம், தனிநபர் பாதுகாப்பை காக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை. காஷ்மீரில் தகவல்தொடர்பு கட்டுப்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு வாசிப்பு.
”தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் 19ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு”- சுற்றறிக்கை.
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம் மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு.