வரலாற்றில் இன்று (21.10.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

அக்டோபர் 21 (October 21) கிரிகோரியன் ஆண்டின் 294 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 295 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 71 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1520 – பேர்டினண்ட் மகெலன் சிலியில் புதிய நீரிணை ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மகலன் நீரிணை எனப் பெயர்பெற்றது.
1805 – டிரபல்கார் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள், பிரெஞ்சு, மற்றும் ஸ்பானியக் கூட்டுப் படைகளின் கடற்படையை வென்றன. இவ்வெற்றி பிரித்தானியக் கடற்படையை 20ம் நூற்றாண்டு வரை இப்பிராந்தியத்தின் பெரும் கடற்படை வல்லரசாக ஆக்கியது.
1805 – ஊல்ம் என்ற இடத்தில் ஆஸ்திரியா நெப்போலியனின் பெரும் இராணுவத்திடம் சரணடைந்தது. நெப்போலியன் 30,000 பேரைச் சிறைப்பிடித்தான்.
1824 – ஜோசப் ஆஸ்ப்டின் போர்ட்லண்ட் சிமெந்துக்கான காப்புரிமம் பெற்றார்.
1837 – அமெரிக்கப் பழங்குடித் தலைவன் ஒசியோலா கைது செய்யப்பட்டான்.
1854 – புளோரன்ஸ் நைட்டிங்கேல் மற்றும் 38 தாதிகள் கிரிமியன் போர் முனைக்கு அனுப்பப்பட்டனர்.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கூட்டமைப்பினரிடம் வேர்ஜீனியாவில் தோற்றனர். ஆபிரகாம் லிங்கனின் நெருங்கிய நண்பர் “எட்வேர்ட் பேக்கர்” கொல்லப்பட்டார்.
1876 – யாழ்ப்பாணத்தில் காலரா நோய் வேகமாகப் பரவியது.
1879 – தொமஸ் எடிசன் தனது முதலாவது தொழில் ரீதியான மின்குமிழைப் பரிசோதித்தார். இது 13 மணி நேரம் எரிந்தது.
1892 – உலக கொலம்பியக் கண்காட்சி சிக்காகோவில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. ஆனாலும், கட்டிட வேலைகள் பூர்த்தியடையாத காரணத்தால் இக்கண்காட்சி 1893, மே 1 ஆம் நாளிலேயே பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது.
1895 – ஜப்பானியப் படைகளின் முற்றுகையினால் போர்மோசா குடியரசு வீழ்ந்தது.
1944 – கிறகுஜேவாச் படுகொலைகள்: நாசி ஜெர்மனியப் படைகள் 7000 சேர்பியரை படுகொலைச் செய்தனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: முதலாவது கமிகசே ஜப்பானிய விமானத் தற்கொலைத் தாக்குதல், அவுஸ்திரேலிய கப்பல் மீது நடத்தப்பட்டது.
1945 – பிரான்சில் முதற்தடவையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1966 – வேல்சில் அபெர்ஃபான் என்னும் கிராமத்தில் நிலக்கரி கழிவுகள் அடங்கிய பாறை வீழ்ந்ததில் 116 பாடசாலைச் சிறுவர்கள் உட்பட 144 பேர் கொல்லப்பட்டனர்.
1969 – சோமாலியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் சியாட் பார் பதவியைக் கைப்பற்றினார்.
1983 – நிறைகளுக்கும் அளவைகளுக்குமான 17வது அனைத்துலகக் கருத்தரங்கில், முழுமையான வெற்றிடத்தில், துல்லியமாக 1/299,792,458 வினாடி நேரத்தில் ஒளி செல்லும் பாதையின் நீளமாக ஒரு மீட்டர் வரையறுக்கப்பட்டது.
1987 – ஈழப்போர்: யாழ்ப்பாணம் மருத்துவமனையில் இந்திய இராணுவத்தினர் சுட்டதில் மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள் உட்பட 21 பேர் கோல்லப்பட்டனர்.
1994 – சியோல் நகரில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் கொல்லப்பட்டனர்.
2003 – குறுங்கோள் ஏரிசின் படங்கள் எடுக்கப்பட்டன.

பிறப்புகள்

1772 – சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ், ஆங்கிலேயக் கவிஞர், மெய்யியலாளர் (இ. 1834)
1790 – அல்போன்சு டி லாமார்ட்டின், பிரெஞ்சுக் கவிஞர், அரசியல்வாதி, அரசுத்தலைவர் (இ. 1869)
1833 – அல்பிரட் நோபல், சுவீடன் நாட்டு கண்டுபிடிப்பாளர், நோபல் பரிசை ஆரம்பித்தவர் (இ 1896)
1851 – ஜார்ஜ் உலைட், ஆங்கிலேயத் துடுப்பாளர் (இ. 1898)
1877 – ஓஸ்வால்ட் அவேரி, கனடிய-அமெரிக்க மருத்துவ ஆய்வாளர் (இ. 1955)
1911 – மேரி பிளேர், அமெரிக்க ஓவியர் (இ. 1978)
1925 – சுர்ஜித் சிங் பர்னாலா, இந்திய அரசியல்வாதி
1929 – அர்சலா கே. லா குவின், அமெரிக்க எழுத்தாளர்
1931 – சம்மி கபூர், இந்திய நடிகர் (இ. 2011)
1931 – ஜிம் பார்க்ஸ் (இளையவர்), ஆங்கிலேயத் துடுப்பாளர்
1937 – தேங்காய் சீனிவாசன், தமிழ் நாடக, திரைப்பட நடிகர், (இ 1988)
1940 – ஜெப்ரி போய்கொட், ஆங்கிலேயத் துடுப்பாளர்
1943 – தாரிக் அலி, பாக்கித்தானிய எழுத்தாளர்
1949 – பெஞ்சமின் நெத்தனியாகு, இசுரேலின் 9வது பிரதமர்
1958 – ஆந்தரே கெய்ம், இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற உருசிய-ஆங்கிலேயர்
1980 – கிம் கர்தாசியன், அமெரிக்க நடிகை
1982 – மாட் டல்லாஸ், அமெரிக்க நடிகர்
1982 – லீ சாங் வேய், மலேசிய இறகுப்பந்தாட்ட வீரர்

இறப்புகள்

1805 – ஹோரஷியோ நெல்சன், ஆங்கிலேய தளபதி (பி. 1758)
1835 – முத்துசுவாமி தீட்சிதர், இந்தியப் புலவர், கருநாடக இசை மும்மூர்த்திகளுள் ஒருவர் (பி. 1775)
2010 – அய்யப்பன், இந்தியக் கவிஞர் (பி. 1949)
2012 – யஷ் சோப்ரா, இந்திய இயக்குனர், தயாரிப்பாளர் (பி. 1932)
2014 – கஃப் விட்லம், ஆத்திரேலியப் பிரதமர் (பி. 1916)
2015 – வெங்கட் சாமிநாதன், தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர்

சிறப்பு நாள்

ஆப்பிள் நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!