இன்றைய முக்கிய செய்திகள்
“வன்முறைகள் நிறுத்தப்பட்டால் மட்டுமே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படும்”. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீண்டும் திட்டவட்டம்.
சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கியது.சட்டப்பேரவையில் இன்று, பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு.
பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது.முன்பதிவு மையங்களை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி முன்பதிவு மையங்களிலும், ஆன்லைனிலும் முன்பதிவு செய்யலாம்
சிறப்பு பேருந்துகள் குறித்த தகவல் மற்றும் புகார்களை 94450-14450, 94450-14436 என்ற எண்களில் தெரிவிக்கலாம்.
1000 ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு – நியாய விலைக்கடைகளில் இன்று விநியோகம் தொடங்கியது.
அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டு வருகிறது, அணுஆயுதம் செய்வதை ஈரான் கைவிடவேண்டும்.உலகத்திற்கே அச்சுறுத்தலாக ஈரான் இருந்து வருகிறது, அதன் மீதான தடைகள் மேலும் அதிகரிக்கப்படுகிறது,அமெரிக்க தளத்திற்கு மிக குறைந்த அளவிலான பாதிப்பே ஏற்பட்டுள்ளது, இதுவரை எந்த அமெரிக்கரும் இதனால் பாதிப்படையவில்லை. அமெரிக்கா அமைதியை விரும்புகிறது, ஈரான் மக்களுக்கு நல்ல எதிர்காலம் வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளில் நேட்டோ படை அதிக மும்முரத்துடன் செயல்பட அழைக்கிறேன், அமெரிக்கா சக்திவாய்ந்த ஏவுகணைகளை தயாரித்து வருகிறது – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.;
தீவிரவாதி அன்சருல்லாவுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்.
நாங்கள் போரை விரும்பவில்லை; இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறோம்.ஈரான் விவகாரத்தில் இந்தியா முன்னெடுக்கும் எந்த ஒரு முயற்சியையும் வரவேற்கத் தயார்.நாட்டு மக்கள் கேட்டதாலேயே சுலைமானி கொலைக்கு பதிலடியாக தாக்குதல் நடத்தினோம். – ஈரான் தூதர் அலி செகேனி.
”சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் தர இயலாது”. மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. தேர்தல் ஆணையம் சொல்லும் காரணங்கள் ஏற்கத்தக்கதாக இல்லை – உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் அதிரடி.