போலீஸ் விசாரணையில் சென்னை இன்ஜினீயர்
`மனைவிக்குக்கூட தெரியாத சீக்ரெட், சிறுமியால் தெரிந்து விட்டது!’ -போலீஸ் விசாரணையில் சென்னை இன்ஜினீயர்
சென்னை போலீஸாரிடம் சிக்கிய இன்ஜினீயர் சாய், ‘என் மனைவிக்குக் கூட தெரியாத என் ரகசிய வாழ்க்கை சிறுமியால் தெரிந்துவிட்டது’ என்று கூறியுள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர் ஜூலியஸ் சீசர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீஸார், சிறுமிக்குத் தொல்லை கொடுத்த புகாரில் இன்ஜினீயர் சாய் என்கிற ராஜா சிவசுந்தரை (28) கைதுசெய்து சிறையில் அடைத்தனர். 13 வயது சிறுமியின் தனிப்பட்ட புகைப்படங்களை வைத்து 2 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதால், இந்த வழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. போலீஸாரின் விசாரணையில், “என்னுடைய சொந்த ஊர் விருதுநகர், பல்லம்பட்டி. என் சிறுவயதிலேயே, அப்பா எங்களை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். அதனால் அம்மா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தேன். பி.டெக் படித்ததும் வேலைதேடி சென்னை வந்தேன். அப்போது, நிரந்தரமான வேலை எதுவும் கிடைக்கவில்லை. சென்னை அண்ணாசாலையில் உள்ள ரிச்சி தெருவில் கம்ப்யூட்டர் இன்ஜினீயர் சர்வீஸ் செய்யும் வேலையைச் செய்தேன். அதில் எனக்குப் போதிய வருமானம் கிடைக்கவில்லை.
அடுத்து, திருமுல்லைவாயல், தாம்பரம், மடிப்பாக்கம், சேலையூர் ஆகிய இடங்களில் நெட் சென்டரைத் தொடங்கினேன். அங்கு வரும் மாணவிகள், பெண்களுடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. என் பேச்சை முழுமையாக நம்பிய மாணவிகள், பெண்களின் தனிப்பட்ட புகைப்படங்களை வாட்ஸ்-அப் மூலம் பெறுவேன். பின்னர், அதை வைத்து அவர்களை மிரட்டி பணம் சம்பாதித்தேன். சந்துரு என்ற பெயரில் சமூக வலைதளத்தில் போலியான அக்கவுன்ட்டைத் தொடங்கி, அதன்மூலம் பெண்கள், மாணவிகளுடன் அறிமுகமானேன். பெண்களைப் புகழ்ந்து பேசுவதால் என்னை முழுமையாக நம்பிவிடுவார்கள். நான் பழகிய பெண்கள், மாணவிகளிடம் எனக்குத் திருமணமாகவில்லை என்று பொய் சொன்னேன். என்னைப் பார்க்க வரும் பெண்களை சினிமா, பார்க் என அழைத்துச் சென்றுள்ளேன்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் அறிமுகம் கிடைத்தது. அவருடன் செல்போனில் பேசினேன். அப்போது, ` என்னை பிளஸ் டூ ஸ்டூடன்ட்’ என்றே அந்த மாணவியிடம் கூறியிருந்தேன். அந்தச் சிறுமியின் பெற்றோர் வசதியானவர்கள். அதனால் சிறுமியின் தனிப்பட்ட புகைப்படங்களைக் காண்பித்து, 2 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினேன். சிறுமியின் பெற்றோர் பணம் தருவதாகக் கூறியதும் முன்னெச்சரிக்கையாகச் செயல்பட்டேன். என்னுடைய செல்போனில் சிறுமியின் அப்பா நம்பருக்கு வீடியோ காலில் பேசினேன். அப்போது, செல்போன் சிக்னல் மூலம் என்னுடைய இருப்பிடத்தைத் காட்டாத வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினேன்.