வரலாற்றில் இன்று (09.10.2024)

 வரலாற்றில் இன்று (09.10.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

அக்டோபர் 9 (October 9) கிரிகோரியன் ஆண்டின் 282 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 283 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 83 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1003 – லெயிஃப் எரிக்சன் கனடாவில் லான்ஸ் ஒக்ஸ் மெடோஸ் என்ற இடத்தில் தரையிறங்கி, அமெரிக்காவில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.
1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
1604 – சுப்பர்நோவா 1604 பால் வெளியில் கண்டுபிடிக்கப்பட்டது.
1760 – ஏழாண்டுப் போர்: ரஷ்யா பேர்லின் நரைப் பிடித்தது.
1771 – டச்சு சரக்குக் கப்பல் பின்லாந்துக் கரையில் மூழ்கியது.
1799 – லூட்டின் என்ற கப்பல் நெதர்லாந்தில் 240 பேருடனும் £1,200,000 பெருமதியான பொருட்களுடனும் மூழ்கியது.
1804 – டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது.
1806 – பிரஷ்யா பிரான்ஸ் மீது போர் தொடுத்தது.
1820 – கயாக்கில் ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1831 – கிரேக்கத் தலைவர் இயோனிஸ் கப்பொடீஸ்ட்றியா படுகொலை செய்யப்பட்டார்.
1835 – கொழும்பு ரோயல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
1854 – ரஷ்யாவில் செவஸ்தபோல் மீதான தாக்குதலை பிரித்தானியா, பிரான்ஸ், மற்றும் துருக்கியப் படைகாள் ஆரம்பித்தன.
1871 – மூன்று நாட்களுக்கு முன்னர் சிக்காகோவில் பரவிய பெரும் தீ அணைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
1888 – வாஷிங்டன் நினைவுச் சின்னம், அக்காலத்தில் உலகின் உயரமான கட்டிடம், வாஷிங்டன் டிசியில் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது.
1910 – மாறுவேடத்தில் உலகப் பயணம் மேற்கொண்ட பின்னர் வ. வே. சு. ஐயர் புதுச்சேரி திரும்பினார்.
1914 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் ஆண்ட்வேர்ப் நகரம் ஜெர்மனியிடம் வீழ்ந்தது.
1934 – யூகோஸ்லாவியாவின் மன்னன் முதலாம் அலெக்சாண்டர் கொல்லப்பட்டான்.
1941 – பனாமாவில் இடம்பெற்ற புரட்சியின் பின்னர் ரிக்கார்டோ டெ லா கார்டியா அதிபரானார்.
1962 – உகாண்டா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1963 – வடகிழக்கு இத்தாலியில் இடம்பெற்ற நிலச்சரிவில் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.
1967 – சே குவேரா பொலிவியாவில் கைது செய்யப்பட்ட அடுத்த நாள் புரட்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1970 – கம்போடியாவில் கெமர் குடியரசு அறிவிக்கப்பட்டது.
1981 – பிரான்சில் மரணதண்டனை நிறுத்தப்பட்டது.
1983 – ரங்கூனில் தென் கொரிய அதிபர் சுன் டூ-ஹுவான் மீது இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் அவர் உயிர் தப்பினார். நான்கு அமைச்சர்கள் உட்பட பலர் உயிரிழந்தனர்.
1987 – யாழ்ப்பாணத்தில் நிதர்சனம் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் முரசொலி நாளிதழ் கட்டிடங்களை இந்திய இராணுவத்தினர் தகர்த்தனர்.
1989 – ரஷ்யாவின் வரோனியொஷ் அருகில் ஒரு பறக்கும் தட்டு இறங்கியதாக சோவியத் ஒன்றிய செய்தித் தாபனம் அறிவித்தது.
2001 – இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.
2004 – ஆப்கானிஸ்தானில் முதற்தடவையாக சனநாயகத் தேர்தல் இடம்பெற்றது.
2006 – வட கொரியா தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியது.

பிறப்புகள்

1879 – மேக்ஸ் வோன் உலோ, செருமானிய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1960)
1897 – எம். பக்தவத்சலம், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் (இ. 1987)
1924 – இம்மானுவேல் சேகரன், தலித் மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு தலைவர்.(இ. 1957
1940 – ஜான் லெனன், ஆங்கிலப் பாடகர், இசையமைப்பாளர் (இ. 1980)
1966 – டேவிட் கேமரன், ஆங்கிலேய அரசியல்வாதி, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்
1968 – டிராய் டேவிஸ், அமெரிக்கக் குற்றவாளி (இ. 2011)
1968 – அன்புமணி ராமதாஸ், தமிழக அரசியல்வாதி

இறப்புகள்

1943 – பீட்டர் சீமன், டச்சு இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1865)
1958 – பன்னிரண்டாம் பயஸ் (திருத்தந்தை) (பி. 1876)
1967 – சே குவேரா, ஆர்ஜென்டீனிய கெரில்லாத் தலைவர், (பி. 1928)
1987 – வில்லியம் பாரி மர்பி, அமெரிக்க மருத்துவர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1892)
1995 – அலெக் டக்ளஸ் – ஹோம், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1903)
2004 – ஜாக்கஸ் தெரிதா, அல்சீரிய-பிரெஞ்சு மெய்யியலாளர் (பி. 1930)
2015 – என். ரமணி, புல்லாங்குழல் கலைஞர் (பி. 1934)

சிறப்பு நாள்

உகாண்டா – விடுதலை நாள் (1962)
எக்குவடோர் – கயாக்கில் விடுதலை நாள் (1820)
உலக அஞ்சல் நாள்

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...