தேர்தல் செய்திகள்

 தேர்தல் செய்திகள்
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை –   முன்னிலை நிலவரம் 

மாவட்ட கவுன்சிலர் 453/515
திமுக(+)- 238
அதிமுக(+)- 214
அமமுக – 0
நாம் தமிழர் – 0
பிற கட்சிகள் – 1

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை –   முன்னிலை நிலவரம்

ஒன்றிய கவுன்சிலர் 4,101/5067
திமுக கூட்டணி – 1,934
அதிமுக கூட்டணி – 1,708
பிற கட்சிகள் – 459

ஊரக உள்ளாட்சித் தேர்தல் – திமுக அமோகம்! 
தமிழ்நாட்டில், பல மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் முழுவதுமாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மதுரையில் வாக்கு எண்ணிக்கை 100 சதவிகிதம் நிறைவடைந்து முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில், 23 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களில் திமுக 12ல் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 212 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களுக்கான தேர்தலில் அதிமுக 94 இடங்களில் வென்றுள்ளது. திமுக 92 இடங்களில் வென்றுள்ளது.

தேனி மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 ஒன்றியங்களுக்கு நடந்த தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தமுள்ள 10 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களில் 8 இடங்களை அதிமுக கைப்பற்றியுள்ளது. திமுக 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. 
98 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களில் அதிமுக கூட்டணி 55-இலும், திமுக கூட்டணி 41 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. மீதமுள்ள இரு இடங்களில் சுயேட்சை வெற்றிபெற்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நிறைவுபெற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. மொத்தமுள்ள 34 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களுக்கான தேர்தலில் திமுக கூட்டணி 23 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி,10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

செங்கம் பகுதி மாவட்ட கவுன்சிலருக்கான வாக்கு எண்ணிக்கை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 341 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களை பொருத்தவரை, திமுக கூட்டணி 141 இடங்களிலும், அதிமுக கூட்டணி 137 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களுக்கான தேர்தலில், திமுக கூட்டணி 5 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணி ஒரு இடத்தில் மட்டும் வென்றுள்ளது. 59 ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தலில், திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில், அதிமுக 16 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

10 மாவட்டங்களில் ஓட்டு எண்ணிக்கை நிறைவு.
திருவண்ணாமலை, நீலகிரி, திருச்சி கருர், தேனி, தூத்துக்குடி, கடலூர், திருவாரூர், நாமக்கல், குமரி உட்பட 10 மாவட்டங்களில் அனைத்து பதவிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை நிறைவு பெற்றது. மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

21 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவு! 
எஞ்சிய 6 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடையவில்லை, மொத்தம் 27 மாவட்டங்களில், 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

7 வாக்குகளில் தோல்வி அடைந்ததால், மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர்!

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...