வரலாற்றில் இன்று – 02.01.2020 எஸ்.ஆர்.ஸ்ரீனிவாச வரதன்

 வரலாற்றில் இன்று – 02.01.2020 எஸ்.ஆர்.ஸ்ரீனிவாச வரதன்
இந்திய-அமெரிக்க கணிதவியலாளர் சாத்தமங்கலம் ரங்க ஐயங்கார் ஸ்ரீனிவாச வரதன் 1940ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் பிறந்தார்.
இவருடைய கணக்கு ஆசிரியர் கணிதத்தை விளையாட்டு போல் கற்றுத்தந்தார். அதன் மூலம் இவர் கணக்கைப் பார்த்து பயந்து ஓட  அவசியம் இல்லை என்பதை உணர்ந்தார்.
கணித அடிப்படையிலான நிகழ்தகவு குறித்து ஆய்வு செய்துக்கொண்டிருந்த சில நண்பர்களை சந்தித்து, அவர்களுடன் இணைந்து ஆய்வுகளில் ஈடுபட்டார். கொல்கத்தா இந்தியப் புள்ளியியல் கழகத்தில் சிறந்த
புள்ளியியலாளரான சி.ஆர்.ராவ் தலைமையில் ஆய்வு செய்து, 1963ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.
இவர் கணிதம், புள்ளியியலில் நிகழ்தகவு, பெரிய விளக்கங்கள் கோட்பாடுகளை (Theory of Large Deviations) உருவாக்கினார். வகையீட்டு சமன்பாடுகள் (Differential Equations) குறித்த கோட்பாடுகளை கண்டறிந்தார். இவரது ‘ஸ்டொகாஸ்டிக் பிராஸசஸ்’ என்ற நூல் கணித உலகில் பெரும் வரவேற்பை பெற்றது.
நிகழ்தகவு கோட்பாட்டில் அடிப்படை பங்களிப்புகளுக்காக ‘ஏபெல்’ பரிசு (2007), பத்ம பூஷண் விருது (2008), அமெரிக்காவின் தேசிய அறிவியல் பதக்கம், இன்ஃபோசிஸ் பரிசு உள்ளிட்ட பல பரிசுகள், பதக்கங்கள், கௌரவங்களைப் பெற்றுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...