இன்றைய ராசி பலன்கள் – 02-01-2020 – வியாழன்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :
தந்தைவழி உறவுகளால் சுபச்செய்திகள் கிடைக்கும். தொழிலில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் எண்ணிய இலாபம் உண்டாகும். புதிய தொழில் வாய்ப்புகளால் அனுகூலமாக பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : சுபச்செய்திகள் கிடைக்கும்.
பரணி : இலாபம் உண்டாகும்.
கிருத்திகை : அனுகூலமான நாள்.
—————————————————————–
ரிஷபம் :
எதிர்பாராத தனவரவு உண்டாகும். சக ஊழியர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கால்நடைகளை வளர்ப்பவர்கள் விலங்குகளிடம் கவனமாக இருக்கவும். மனதில் தேவையற்ற எண்ணங்களால் உடல் சோர்வுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : வரவுகள் உண்டாகும்.
ரோகிணி : சாதகமான நாள்.
மிருகசீரிஷம் : சோர்வுகள் உண்டாகும்.
—————————————————————–
மிதுனம் :
எதிர்பாராத செலவுகள் உண்டாகும். மனதில் தேவையற்ற கவலைகள் தோன்றும். பணியில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். வாகனப் பயணங்களில் தேவையான ஆவணங்களுடன் செல்லவும். உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிஷம் : செலவுகள் உண்டாகும்.
திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.
புனர்பூசம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
—————————————————————–
கடகம் :
இழந்த பொருட்களை மீட்பதற்கான சூழல் உண்டாகும். போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளால் முன்னேற்றம் உண்டாகும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : வெற்றி கிடைக்கும்.
பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.
—————————————————————–
சிம்மம் :
பேச்சுக்களில் கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் உண்டாகும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். பொருளாதார நிலையில் சாதகமற்ற சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மகம் : அலைச்சல்கள் உண்டாகும்.
பூரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திரம் : தடைகள் ஏற்படும்.
—————————————————————–
கன்னி :
பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். தொழிலில் புதுவிதமான சலுகைகளை கொடுத்து இலாபம் காண்பீர்கள். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
அஸ்தம் : கீர்த்தி உண்டாகும்.
சித்திரை : அனுகூலமான நாள்.
—————————————————————–
துலாம் :
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். புதிய இடங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவால் எடுத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு
சித்திரை : முன்னேற்றமான நாள்.
சுவாதி : எண்ணங்கள் ஈடேறும்.
விசாகம் : குழப்பங்கள் நீங்கும்.
—————————————————————–
விருச்சிகம் :
வாகனங்களால் தொழில் இலாபம் ஏற்படும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான சூழல் அமையும். உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதுவிதமான யுக்திகளை கையாண்டு தொழிலில் இலாபம் அடைவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
விசாகம் : இலாபகரமான நாள்.
அனுஷம் : முன்னேற்றம் உண்டாகும்.
கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.
—————————————————————–
தனுசு :
செய்யும் தொழிலில் மரியாதைகள் அதிகரிக்கும். ஆராய்ச்சி பணிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். இளைய உடன்பிறப்புகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். ஆகாய மார்க்க தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு எண்ணிய வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : மரியாதைகள் அதிகரிக்கும்.
பூராடம் : வெற்றி கிடைக்கும்.
உத்திராடம் : சாதகமான நாள்.
—————————————————————–
மகரம் :
தொழிலில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள்.  உடன்பிறப்புகளிடம் கனிவாக பழகவும். எதிர்பார்த்த கடன்உதவிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மருத்துவ செலவுகள் உண்டாகலாம். பிறரின் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் பணியில் கவனத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திராடம் : வெற்றி கிடைக்கும்.
திருவோணம் : செலவுகள் உண்டாகலாம்.
அவிட்டம் : கவனம் வேண்டும்.
—————————————————————–
கும்பம் :
தொழிலில் ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கி முன்னேற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். அயல்நாட்டு பயணங்களால் சாதகமான சூழல் அமையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : முன்னேற்றமான நாள்.
சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : பொருட்சேர்க்கை உண்டாகும்.
—————————————————————–
மீனம் :
மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களால் குழப்பமான சூழல் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். மனைவிவழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
பூரட்டாதி : மாற்றம் உண்டாகும்.
உத்திரட்டாதி : ஆதரவுகள் கிடைக்கும்.
ரேவதி : இலாபம் உண்டாகும்.
—————————————————————–
 – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...