வரலாற்றில் இன்று – 01.01.2020 சத்தியேந்திர நாத் போஸ்
இந்திய இயற்பியலாளர் சத்தியேந்திர நாத் போஸ் 1894ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார்.
இவர் 1920ஆம் ஆண்டுகளில் குவாண்டம் துறையில் மேற்கொண்ட ஆய்விற்காகவும், அதன் மூலம் போஸ்-ஐன்ஸ்டைன் செறிபொருள், போஸ்-ஐன்ஸ்டைன் புள்ளியியல் போன்ற தத்துவங்களுக்காகவும் அறியப்படுகிறார். இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவரான பால் டிராக் என்பவரால் போஸான் வளிமத்திற்கு இவரது நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது.
இவர் அறிவியலில் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி பத்ம விபூஷண் விருது இவருக்கு இந்திய அரசால் 1954ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இவர் 1974ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
- 1995ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி உலக வணிக அமைப்பு உருவாக்கப்பட்டது.
- 1992ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி கோபால் (COBOL) நிரலாக்க மொழியை கண்டறிந்த கிரேஸ் முர்ரே ஹாப்பர் மறைந்தார்.
- 1999ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி யூரோ நாணயம் (ஐரோப்பா) அறிமுகமானது.
- 1881ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி மணியார்டர் அனுப்பும் முறை தொடங்கப்பட்டது.