இன்றைய ராசி பலன்கள் – 01-01-2020 – புதன்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :
பொதுக் காரியங்களில் ஈடுபட்டு நற்பேறுகள் கிடைக்கப் பெறுவீர்கள். இஷ்ட தெய்வங்களை வணங்குவீர்கள். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
அஸ்வினி : நற்பெயர் கிடைக்கும்.
பரணி : மாற்றங்கள் உண்டாகும்.
கிருத்திகை : சுபிட்சமான நாள்.
—————————————————————
ரிஷபம் :
மூத்த சகோதரர்களால் தனலாபம் ஏற்படும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். வெளியூர் பயணங்களில் மேன்மையான சூழல் உண்டாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : தனலாபம் உண்டாகும்.
ரோகிணி : மேன்மையான நாள்.
மிருகசீரிஷம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
—————————————————————
மிதுனம் :
கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய நண்பர்களை சந்திப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். விவாதங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். தூர தேச பயணங்களை மேற்கொள்ள முயல்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : அன்பு அதிகரிக்கும்.
திருவாதிரை : முடிவுகள் சாதகமாகும்.
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
—————————————————————
கடகம் :
செய்யும் பணிகளில் கவனமாக இருக்கவும். நெருக்கமானவர்களிடம் உரையாடும்போது பேச்சில் நிதானம்
வேண்டும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் தேவை. சுயதொழிலில் மந்தமான இலாபம் கிடைக்கும். அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : பணிகளில் கவனம் தேவை.
பூசம் : நிதானம் வேண்டும்.
ஆயில்யம் : இலாபம் கிடைக்கும்.
—————————————————————
சிம்மம் :
மனைவியின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். வெளியூர் வேலைவாய்ப்புகள் சாதகமான முடிவை தரும். எதிர்பாராத கடன் உதவிகள் கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
மகம் : சாதகமான நாள்.
பூரம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
—————————————————————
கன்னி :
வாகனங்களால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். தொழில் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். தலைமைப் பதவி பெறுவதற்கான வாய்ப்புகள் சாதகமாகும். புதிய வீடுகள் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அரசாங்க பணிகளால் மகிழ்ச்சி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
உத்திரம் : இலாபம் உண்டாகும்.
அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.
சித்திரை : முயற்சிகள் மேலோங்கும்.
—————————————————————
துலாம் :
புதிய திட்டம் ஒன்றை வகுத்து அதை செயல்படுத்த முயல்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். பொதுக் கூட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். இளைய உடன்பிறப்புகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : பாராட்டுகள் கிடைக்கும்.
சுவாதி : கீர்த்தி உண்டாகும்.
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
—————————————————————
விருச்சிகம் :
பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் குறைந்து சுமூக நிலை உண்டாகும். பொதுத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல் நிறம்
விசாகம் : பிரச்சனைகள் குறையும்.
அனுஷம் : சாதகமான சூழல் அமையும்.
கேட்டை : புத்துணர்ச்சியான நாள்.
—————————————————————
தனுசு :
கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். தாயாரின் ஆதரவினால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மனைகளில் புதிய இல்லங்களை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மூலம் : இலாபம் கிடைக்கும்.
பூராடம் : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திராடம் : முயற்சிகள் மேலோங்கும்.
—————————————————————
மகரம் :
குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகள் எதிர்பார்த்த முடிவை தர காலதாமதமாகும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். தனவரவு மத்தியமாகவே இருக்கும். வெளியூர் பயணம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.
திருவோணம் : வாக்குறுதிகளை தவிர்க்கவும்.
அவிட்டம் : முயற்சிகள் ஈடேறும்.
—————————————————————
கும்பம் :
கணவன், மனைவிக்கிடையே இருந்த சண்டை சச்சரவுகள் குறைந்து சுமூக நிலை உண்டாகும். வர்த்த பணிகள் சம்பந்தமான புதிய சிந்தனைகள் தோன்றும். எதிர்பாராத பரிசுகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : சாதகமான நாள்.
சதயம் : புதிய சிந்தனைகள் தோன்றும்.
பூரட்டாதி : பரிசுகள் கிடைக்கும்.
—————————————————————
மீனம் :
வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களால் மனவருத்தம் உண்டாகும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்று.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
பூரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.
உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
ரேவதி : மனவருத்தம் உண்டாகும்.
—————————————————————
– ஜோதிடர் அ.மோகன்ராஜ்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...