தேர்தல் செய்திகள்
ஊரக உள்ளாட்சி தேர்தலில், 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது! 46,639 பதவி இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடக்கிறது. ஒரு கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். 2ம் கட்ட வாக்குப்பதிவு – 25,008 வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பு. போலீசார், முன்னாள் ராணுவ வீரர்கள் 61 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணி.
ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முடிவை ஜனவரி 2ம் தேதி வெளியிட தடையில்லை- உயர்நீதிமன்றம்.
தூத்துக்குடி: வேலன்புதுக்குளம் வாக்குச்சாவடி முறைகேடு தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் 2 பேர் பணி இடைநீக்கம். மீதமுள்ள அதிகாரிகள் மீது துறைரீதியிலான நடவடிக்கை – ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
27ம் தேதி நடைபெற்ற தேர்தலில் குளறுபடி என புகார், 30 வாக்கு சாவடிகளில், 31ம் தேதிக்குள் வாக்குப்பதிவு: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
27ம் தேதி நடைபெற்ற தேர்தலில் குளறுபடி என புகார், 30 வாக்கு சாவடிகளில், 31ம் தேதிக்குள் வாக்குப்பதிவு: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
9 மாவட்டங்களில், 30 இடங்களில் மறு வாக்குப் பதிவு.