இதுவரை நாம் பார்க்காத காட்சிகளை வெளியிட்ட துருவ் – ஆதித்ய வர்மாவில்

’ஆதித்ய வர்மாவில்’ இதுவரை நாம் பார்க்காத காட்சிகளை வெளியிட்ட துருவ் 
முதலில் இந்த படத்தை ’வர்மா’ என்ற பெயரில் இயக்குநர் பாலா இயக்கினார். பின்னர் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக கடைசி நேரத்தில் படம் ரிலீஸாகாமல் போனது. பின்னர் இயக்குநர் கிரிசாயா என்பவர் ஆதித்ய வர்மா படத்தை இயக்கினார். இவர் அர்ஜுன் ரெட்டி படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியவர். ஈ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, ரதன் இசையமைத்தார்.

’ஆதித்ய வர்மா’ படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், பனிதா சந்து, ராஜா, அன்புதாசன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். படம் வெளியாவதற்கு முன்பு பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர் 
ரசிகர்கள். காரணம் தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டியும்’, இந்தியில்  வெளியான ‘கபீர் சிங்கும்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, வசூல் ரீதியாகவும் சாதனைகளை படைத்தன.. 

ஆனால் தமிழில் வெளியான ஆதித்ய வர்மாவோ, பெரும் தோல்வியை தழுவியது. படம் வெளியாகி பல சர்ச்சைகளைக் கிளப்பியது. இந்நிலையில் இந்த படத்தில் சென்சார் செய்யப்படாத காட்சிகளை தற்போது 
சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார் ஆதித்ய வர்மா படத்தின் ஹீரோ துருவ் விக்ரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!