வரலாற்றில் இன்று (10.08.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
வரலாற்றில் இன்று | Today History in Tamil
ஆகஸ்டு 10 (August 10) கிரிகோரியன் ஆண்டின் 222 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 223 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 143 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
கிமு 612 – அசிரியப் பேரரசன் சின்சரிஷ்கன் கொல்லப்பட்டார்.
610 – முகம்மது நபி குர்ஆனைப் பெற்ற நாள். இது இஸ்லாமில், “லைலத்துல் கத்ர்” அல்லது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு எனப்படுகிறது.
955 – புனித ரோமப் பேரரசன் முதலாம் ஒட்டோ மகியார்களைத் தோற்கடித்து 50 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
1519 – மகலனின் ஐந்து கப்பல்கள் உலகைச் சுற்றிவர செவில் நகரில் இருந்து புறப்பட்டன.
1675 – ரோயல் கிறீனிச் வானாய்வகத்துக்கான அடிக்கல் லண்டனில் நாட்டப்பட்டது.
1680 – நியூ மெக்சிகோவில் ஸ்பானிய குடியேறிகளுக்கெதிராக புவெப்லோக்களின் எழுச்சி ஆரம்பமானது.
1741 – குளச்சல் போர்: திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியுடனான போரில் டச்சுத் தளபதி இயுஸ்ட்டாச்சியஸ் டி லனோய் என்பவனைச் சிறைப்பிடித்தார்.
1776 – அமெரிக்காவின் விடுதலைப் பிரகடன செய்தி லண்டனைப் போய்ச் சேர்ந்தது.
1792 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிசில் தீவிரவாதிகள் ரிலெரீஸ் அரண்மனையை முற்றுகையிட்டு பதினாறாம் லூயி மன்னனைக் கைது செய்தனர்.
1809 – குவிட்டோ (தற்போதய ஈக்குவாடோரின் தலைநகர்) பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1821 – மிசூரி ஐக்கிய அமெரிக்காவின் 24வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் மிசூரியின் தென்மேற்குப் பகுதியில் கூட்டணிப் படைகளை வென்றனர்.
1904 – ரஷ்யப் படைகளுக்கும் ஜப்பானியர்களுக்கும் இடையில் மஞ்சள் கடலில் கடற்போர் இடம்பெற்றது.
1913 – பால்கான் போர்கள்: பல்கேரியா, ருமேனியா, செர்பியா, மொண்டெனேகுரோ, கிரேக்கம் ஆகிய நாடுகள் புக்கரெஸ்ட் ந்கரில் அமைதி உடன்பாட்டை எட்டின.
1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் குவாமில் நிலை கொண்டிருந்த கடைசி ஜப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர்.
1948 – ஜவஹர்லால் நேரு இந்திய அணுசக்திப் பேரவையைத் (Atomic Energy Commission) துவக்கி வைத்தார்.
1990 – மகெலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது.
2000 – உலக மக்கள் தொகை 6 பில்லியனைத் தாண்டியது (www.ibiblio.org தரவின் படி).
2003 – யூரி மலென்சென்கோ விண்வெளியில் திருமனம் புரிந்த முதலாவது மனிதர்.
2006 – திருகோணமலையில் சேருவிலப் பகுதியில் தொடர்ச்சியான குண்டுவீச்சினால் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1894 – வி. வி. கிரி, 4வது இந்தியக் குடியரசுத் தலைவர் (இ. 1980)
இறப்புகள்
1790 – பிலிப்பு தெ மெல்லோ, தமிழ் டச்சு அறிஞர் (பி. 1723)
1899 – சி. தியாகர், நல்லூரைச் சேர்ந்த தமிழறிஞர்
1980 – யாஹ்யா கான், பாகிஸ்தான் அதிபர் (பி. 1917)
சிறப்பு நாள்
எக்குவாடோர் – விடுதலை நாள் (1809)