வரலாற்றில் இன்று – 25.12.2019
மூதறிஞர் இராஜாஜி – இன்று நினைவு தினம்..!!
ராஜகோபாலாச்சாரி அவர்கள் 1878ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் (அன்றைய சேலம் மாவட்டம்) தொரப்பள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார்.
இவர் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இணைந்தார். மேலும் ரௌலட் சட்டத்திற்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் பங்கேற்றார்.
இவர் 1917ஆம் ஆண்டு சேலம் நகராட்சி உறுப்பினராகவும், பின்னர் நகராட்சி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் பிரதான மந்திரியாகப் பொறுப்பேற்றார். 1946ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
1954ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. சேலத்து மாம்பழம் என்று அழைக்கப்பட்ட இராஜாஜி 1972ஆம் ஆண்டு மறைந்தார்.