இன்றைய முக்கிய செய்திகள்
“பாலியல் புகார் கூற வேண்டும் என்றால், 2002ம் ஆண்டுக்கு முன்பு நிகழ்ந்ததாக கூறுங்கள்!” சத்சங்கம் உரையில் நித்தியானந்தா விடுத்த சவால்…!
பார்க்கிங் வசதியை முறைப்படுத்தும் வாகன நிறுத்த மேலாண்மை திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார் எஸ்.பி.வேலுமணி.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் 6ம் தேதி காலை சட்டப்பேரவை கூடுகிறது. – சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன்.
தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நடத்திய பேரணி தொடர்பாக 8,000 பேர் மீது வழக்கு. ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் மீது வழக்குப் பதிவு. 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது எழும்பூர் காவல்நிலையம்.
இந்தியாவில் இதுவரை 3 இஸ்லாமியர்கள் ஜனாதிபதியாக இருந்துள்ளனர்; பாகிஸ்தானில் ஒரு இந்துவோ, கிறிஸ்தவரோ ஜனாதிபதி ஆகியிருக்கிறார்களா?.– ஹெச்.ராஜா.
ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் ராணுவம் நடத்திய பல்வேறு தாக்குதல்களில், 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழப்பு – 45 தீவிரவாதிகள் காயம்.
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் ஆலோசனை, ஆலோசனையில் தலைமை தளபதி பிபின் ராவத், அஜித் தோவல், சிஆர்பிஎஃப் தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்பு.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு.