தளபதிக்காக ராட்சத பூ மாலையை கிரேனில் கொண்டு வந்து வெறித்தனம் காட்டிய கர்நாடக ரசிகர்கள்! மெர்சலான விஜய்!
தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் நடித்து வரும் 64 படத்தின் படபிடிப்பு சென்னையை அடுத்து, தற்போது கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடைபெற்று வருகிறது.விஜய்யை பார்க்க சென்னையில் எப்படி ரசிகர்கள் ரவுண்டு கட்டினார்களோ… அதே போல் தளபதியை பார்க்க வேண்டும் என ஒவ்வொரு நாளும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் கர்நாடகாவில் உள்ள விஜய் ரசிகர்கள்.அந்த வகையில், தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் விஜய்யை காண்பதற்காக அவர் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டலிலும், படப்பிடிப்பு தளத்திலும், நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு வருகின்றனர்.
Tags: மாயா
