நிர்பயா பாலியல் குற்றவாளி பவன் குமார் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம். பவன் குமார் மனுவை ஜனவரி 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக சற்றுமுன் தெரிவித்த நிலையில் மீண்டும் விசாரிக்க முடிவு.(சிறார் நீதி சட்டத்தின் படி தன்னை நடத்த வேண்டும் என நிர்பயா பாலியல் குற்றவாளி பவன் குமார் தாக்கல் செய்த மனு ஜனவரி 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.)
துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் மீது ஊழல் வழக்கு தொடரப்படுவது கவலையளிக்கிறது. ஊழல் வழக்கு நம்முடைய நாகரீகத்தின் மீதுள்ள கறையாகும்; இது ஒருபோதும் நிகழக்கூடாது. – தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
சிறார்களின் ஆபாச படங்களை பகிர்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக மேலும் 30 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது – ஏடிஜிபி ரவி. பயன்படுத்துவதற்கு எளிய வகையில் காவலன் செயலி மாற்றியமைக்கப்படும் – ஏடிஜிபி ரவி.
தமிழகத்தில் எம் சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்கள், தொழில்நுட்ப வல்லுநர் குழுவால் பதிவு செய்து அங்கீகாரம் பெற வேண்டும். அங்கீகாரம் இல்லாமல் எம் சாண்ட் தயாரித்தால் சட்டப்படி நடவடிக்கை – தமிழக அரசு எச்சரிக்கை.
இணைய சேவை துண்டிப்பு, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெறும் நிலையில், மத்திய அரசின் உத்தரவால் டெல்லியில் சில பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல். அண்டை மாநிலங்களில் இருந்து போராட்டக்காரர்கள் டெல்லியில் குவிந்து வருவதாக உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை. டெல்லியின் எல்லை பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்.
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 3வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய சென்னை பல்கலைக்கழக மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து பின்பு விடுவிப்பு