வரலாற்றில் இன்று (16.07.2024)

 வரலாற்றில் இன்று (16.07.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

சூலை 16 (July 16) கிரிகோரியன் ஆண்டின் 197 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 198 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 168 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

622 – முகமது நபி மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் தொடங்கினார். இது இஸ்லாமிய நாட்காட்டின் தொடக்கமாகும்.
1661 – ஐரோப்பாவின் முதலாவது வங்கித் தாள் (banknote) சுவீடனில் வெளியிடப்பட்டது.
1769 – சான் டியேகோ நகரம் அமைக்கப்பட்டது.
1930 – எதியோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை அதன் மன்னர் ஹைல் செலாசி வெளியிட்டார்.
1942 – பிரெஞ்சு அரசு நாட்டில் உள்ள அனைத்து 13,000-20,000 யூதர்களையும் சுற்றி வளைத்துக் கைது செய்ய காவற்துறையினருக்கு உத்தரவிட்டது.
1945 – மான்ஹட்டன் திட்டம்: முதலாவது அணுகுண்டு சோதனையை ஐக்கிய அமெரிக்கா நியூ மெக்சிகோ அலமொகோத்ரோவுக்கு அருகில் உள்ள பாலைவனத்தில் வெற்றிகரமாகச் சோதித்தது.
1948 – இயேசு கிறிஸ்து வாழ்ந்த நசரெத் நகரத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.
1950 – உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் உருகுவாய் பிரேசிலை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
1955 – டிஸ்னிலாந்து பூங்கா கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டது.
1965 – பிரான்சையும் இத்தாலியையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப் பாதை திறக்கப்பட்டது.
1969 – அப்பல்லோ 11 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. இதுவே சந்திரனில் இறங்கவிருக்கும் முதலாவது மனிதரை ஏற்றிச் சென்ற விண்கலம் ஆகும்.
1979 – ஈராக் அதிபர் ஹசன் அல்-பாக்ர் பதவியைத் துறந்ததை அடுத்து சதாம் உசேன் அதிபராகப் பதவியேற்றார்.
1989 – புளொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1990 – பிலிப்பீன்சில் 7.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1600 பேர் கொல்லப்பட்டனர்.
1994 – ருவாண்டாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1995 – காங்கேசன்துறையில் விடுதலைப் புலிகளால் இலங்கை கடற்படையின் எடித்தாரா கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.
1994 – “ஷூமேக்கர்-லெவி 9” என்ற வால்வெள்ளி வியாழனுடன் மோதியது.
1999 – ஜோன் எஃப். கென்னடி, இளையவர், அவரது மனைவி விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டனர்.
2004 – தமிழ்நாடு கும்பகோணத்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 94 பிள்ளைகள் தீயிற் கருகி மாண்டனர்.
2004 – மிலேனியம் பூங்கா சிக்காகோவில் அமைக்கப்பட்டது.
2006 – தென்கிழக்கு சீனாவில் இடம்பெற்ற கடற் சூறாவளியினால் 115 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1896 – ட்றிகுவே லீ, ஐக்கிய நாடுகள் அவையின் முதலாவது பொதுச் செயலாளர் (இ. 1968)
1942 – முவம்மார் அல் கடாபி, லிபியாவின் தலைவர்
1968 – தன்ராஜ் பிள்ளை, இந்திய ஹாக்கி வீரர்.
1984 – கத்ரீனா காயிஃப், இந்திய நடிகை

இறப்புகள்

1989 – உமாமகேஸ்வரன், புளொட் அமைப்பின் தலைவர்
2009 – டி. கே. பட்டம்மாள், கருநாடக இசைப் பாடகி (பி. 1919)

சிறப்பு நாள்

*****

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...