வரலாற்றில் இன்று – 20.12.2019 – ராபர்ட் ஜேமிசன் வான் டி கிராஃப்

 வரலாற்றில் இன்று – 20.12.2019 – ராபர்ட் ஜேமிசன் வான் டி கிராஃப்
ராபர்ட் ஜேமிசன் வான் டி கிராஃப்
அமெரிக்க கண்டுபிடிப்பாளரான ராபர்ட் ஜேமிசன் வான் டி கிராஃப் 1901ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார்.
அவர் சிறுவயதில் கால்பந்து விளையாடும்போது கால் முறிந்ததால் பல மாதங்கள் வீட்டிலிருந்தார். அப்போது இன்ஜின்கள் குறித்து பல நூல்களைப் படித்தார்.
பின்பு அலபாமா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1924ஆம் ஆண்டு மேரி க்யூரி அணுக்கருவை குறித்து சில செயல்முறை விளக்கங்களை கொடுத்ததை கண்டு கவரப்பட்ட இவர் அணு ஆற்றல் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டார். மேலும், இவர் மின்னியல் ஆக்ஸிலரேஷன் துறையிலும் பல மேம்பாடுகளை செய்துள்ளார். 
கெல்வின் வகை உயர் மின்னழுத்த ஜெனரேட்டரை மேம்படுத்தும் முயற்சியை தொடங்கி இறுதியாக, 7 மில்லியன் வோல்ட் உற்பத்தி செய்யும் 43 அடி உயர ஜெனரேட்டரை உருவாக்கினார். இந்த ஜெனரேட்டருக்கு 1935ஆம் ஆண்டு உரிமம் பெற்றார். இது மருத்துவத்துறைக்கு உதவியாக இருந்தது.
இரண்டாம் உலகப்போரில் இவரது ஜெனரேட்டரை பயன்படுத்தி கடற்படை தளவாடங்களை எக்ஸ்-ரே ஆய்வு செய்வதற்கான பொறுப்பில் நியமிக்கப்பட்டார். பின்பு அணு ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு முக்கியத்துவம் வாய்ந்த பல சாதனங்களைக் கண்டுபிடித்த வான் டி கிராஃப் 1967ஆம் ஆண்டு மறைந்தார்.
சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம்
சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் டிசம்பர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2002ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி உலக ஒருமைப்பாடு திட்டத்தின் கீழ் ஒரு நிதியத்தை நிறுவியது. வளரும் நாடுகளில் வறுமையை ஒழிப்பது மற்றும் மனித சமூக மேம்பாட்டிற்கு உதவுவதே இதன் நோக்கமாகும்.
நாட்டின் பல்வேறு இடங்களிலுள்ள மக்களிடம் ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்கான வழிகள், அமைதி, செழிப்பு, வளரும் தலைமுறையினரிடம் நிலையான முன்னேற்றம் ஏற்படவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.
முக்கிய நிகழ்வுகள்

  • 1955ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி கார்டிஃப், வேல்சின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.
  • 1969ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி பெண் இயக்கத்திற்காகப் பாடுபட்ட சமூக சீர்த்திருத்த சிந்தனையாளர் சகோதரி சுபலட்சுமி மறைந்தார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...