இன்றைய ராசிபலன்கள் – 20.12.2019 – வெள்ளிக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :
தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தவும். உத்தியோகஸ்தர்களுக்கு பயணங்கள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது மகிழ்ச்சியை தரும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். எதிலும் உணர்ச்சி பூர்வமாக செயல்படாமல் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அஸ்வினி : கவனம் வேண்டும்.
பரணி : பயணங்கள் அதிகரிக்கும்.
கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.
———————————————————————–
ரிஷபம் :
சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். புதிய ஆடை, அணிகலன் சேர்க்கைகள் பற்றிய எண்ணங்கள் உருவாகும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகளை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புத்திரர்களின் வழியில் அனுகூலமான வாய்ப்புகள் மற்றும் சுபச்செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : மாற்றம் உண்டாகும்.
ரோகிணி : பிரச்சனைகள் குறையும்.
மிருகசீரிஷம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
———————————————————————–
மிதுனம் :
குடும்ப பொருளாதாரம் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றமான சூழல்கள் உண்டாகும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகத்தின் மூலம் தொழிலில் இலாபம் அதிகரிக்கும். புதுவிதமான பயணங்களால் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.
திருவாதிரை : இலாபம் அதிகரிக்கும்.
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
———————————————————————–
கடகம் :
மனதில் தோன்றும் பலவிதமான சிந்தனைகளால் குழப்பமான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகள் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டு துறையில் ஆர்வம் அதிகரிக்கும். தகவல் தொடர்புத் துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
புனர்பூசம் : குழப்பம் உண்டாகும்.
பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : சாதகமான நாள்.
———————————————————————–
சிம்மம் :
குடும்ப உறுப்பினர்களுக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க இயலும். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் தேவையற்ற கருத்துக்களை கூறுவதை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனம் வேண்டும். கொடுக்கல் – வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மகம் : அனுசரித்து செல்லவும்.
பூரம் : புரிதல் உண்டாகும்.
உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.
———————————————————————–
கன்னி :
மூத்த உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். கலைஞர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். வெளியூர் தொடர்பான பயணங்கள் பற்றிய சிந்தனைகள் உண்டாகும். சபைகளில் எதிர்பார்த்த ஆதரவுகளால் முன்னேற்றமான சூழல் உண்டாகும். சுபச்செய்திகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திரம் : அனுகூலமான நாள்.
அஸ்தம் : திறமைகள் வெளிப்படும்.
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
———————————————————————–
துலாம் :
அரசு தொடர்பான காரியங்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். புதிய தொழில் சார்ந்த சிந்தனைகளில் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு செயல்படுத்தவும். இன்பச் சுற்றுலா சென்று வருவதற்கான சூழல் உண்டாகும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்
சித்திரை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
சுவாதி : கவனம் வேண்டும்.
விசாகம் : நெருக்கடியான நாள்.
———————————————————————–
விருச்சிகம் :
வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். நிர்வாகத் துறையில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி எண்ணங்கள் மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : செல்வாக்கு மேம்படும்.
அனுஷம் : ஆதரவு கிடைக்கும்.
கேட்டை : எண்ணங்கள் மேலோங்கும்.
———————————————————————–
தனுசு :
தொழில் சார்ந்த முடிவுகளை எடுக்கும் போது நன்கு சிந்தித்து எடுக்கவும். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் தாங்களே மேற்கொள்வது நன்மை அளிக்கும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழல் உண்டாகும். உடலுழைப்பை அதிகரிப்பதன் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் நிமிர்த்தமான பயணங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : சிந்தித்து செயல்படவும்.
பூராடம் : தனவரவுகள் மேம்படும்.
உத்திராடம் : முன்னேற்றமான நாள்.
———————————————————————–
மகரம் :
திருமணம் தொடர்பான காரியங்களில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். சமூக பணியில் இருப்பவர்களுக்கு பொதுமக்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாலின மக்களின் மூலம் புதிய வாய்ப்புகள் உண்டாகும். கூட்டாளிகளின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களை சேர்ப்பது பற்றிய சிந்தனைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : முன்னேற்றமான நாள்.
திருவோணம் : வாய்ப்புகள் உண்டாகும்.
அவிட்டம் : அனுகூலமான நாள்.
———————————————————————–
கும்பம் :
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் தேவையற்ற கருத்துக்களை கூறுவதை தவிர்க்கவும். மற்றவர்களுக்கு உதவும் போது சற்று சிந்தித்து செயல்படவும். தம்பதிகளுக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். சம வயதினரிடம் சூழ்நிலைக்கு தகுந்தவாறு விட்டுக்கொடுத்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அவிட்டம் : விவாதத்தை தவிர்க்கவும்.
சதயம் : சிந்தித்து செயல்படவும்
பூரட்டாதி : விட்டுக்கொடுத்து செல்லவும்.
———————————————————————–
மீனம் :
மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். சமவயதினரிடம் தங்கள் கருத்துக்களை பரிமாறும் போது நம்பிக்கையானவரா என்று அறிந்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழல்கள் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : பயணங்கள் உண்டாகும்.
ரேவதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
———————————————————————–
       – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...