வரலாற்றில் இன்று – 19.12.2019 – ருடால்ஃப் ஹெல்
ருடால்ஃப் ஹெல்
வீடியோ கேமரா ட்யூபை கண்டுபிடித்த ருடால்ஃப் ஹெல் 1901ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.
ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செய்திகளை அனுப்ப பயன்படுத்தும் தொலைநகல் சாதனத்தின் முன்னோடியான ஹெல்ஷ்ரீபர் (Hellschreiber) என்ற கருவியை 1920ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.
ஃபேக்ஸ், டெலக்ஸ், கலர் ஸ்கேனர் ஆகியவற்றுக்கு இச்சாதனமே முன்னோடியாக திகழ்ந்தது.
இவரது ‘ஹெல் ரெக்கார்டர்’ கருவி, தகவல் தொடர்பு துறையில் பெரும் வரவேற்பை பெற்றதால், 1929ஆம் ஆண்டு சொந்த நிறுவனம் தொடங்கினார். இவர் 1932ஆம் ஆண்டு எலக்ட்ரோ மெக்கானிக்கல் ஹெலிகல் ஸ்கேன் பிரிண்ட் சிஸ்டம் என்ற கருவியைக் கண்டுபிடித்தார்.
வியன்னா போட்டோகிராஃபிக் சொசைட்டியின் தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். தொலைத்தொடர்பு துறையின் ஆசானாக போற்றப்படும் ருடால்ஃப் ஹெல் 2002ஆம் ஆண்டு மறைந்தார்.