முக்கிய செய்திகள்

 முக்கிய செய்திகள்
காஷ்மீரில் கடந்த ஆண்டு 802 கல்லெறி சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு 544ஆக பதிவாகியுள்ளது, இதில் 190 சம்பவங்கள் ஆக.5ம் தேதிக்கு மேல் நடந்துள்ளது – மத்திய உள்துறை அமைச்சகம்.

எழுத்தாளர் சோ.தர்மனுக்கு
சாகித்ய அகாடமி விருது!

அமைச்சர் வேலுமணிக்கு
எதிரான டெண்டர் முறைகேடு புகார்: ஆரம்பகட்ட விசாரணையில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் – சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.

கொடைக்கானல்:
அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு – டெபாசிட் கட்டணம் செலுத்தாததால் தள்ளுபடி.

ரோஹித் புதிய சாதனை 
ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல் அசத்தல் சதம்! இந்திய அணி, 387 ரன்கள் குவிப்பு. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் துவக்க வீரராக ஒரே ஆண்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார் ரோஹித்சர்மா. இந்தாண்டு, 10 சதங்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது

38வது ஜிஎஸ்டி
கவுன்சில் கூட்டம், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

”சந்திரயான் – 3
திட்ட இயக்குநராக வீர முத்துவேல் நியமனம்” சந்திரயான் 3 திட்டத்திற்கான திட்ட இயக்குநராக வீர முத்துவேல் நியமனம் – இஸ்ரோ அறிவிப்பு.

INDvsWI 2nd ODI
டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சு தேர்வு.

சிபிஎஸ்இ
10,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு. 10ம் வகுப்பு தேர்வு, பிப். 15ம் தேதி முதல், மார்ச் 20 வரை நடைபெறுகிறது; 12ம் வகுப்பு தேர்வு, பிப். 15 முதல் மார்ச் 30ம் தேதி வரை நடைபெறுகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு
: சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம். மாணவர்கள் போராட்டத்தால்; சென்னை பல்கலைகழகத்தில் போலீஸ் குவிப்பு.

போராட்டத்தின்
போது ரயில் உள்ளிட்ட பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவோரை துப்பாக்கியால் சுடுங்கள்- மாவட்ட நிர்வாகங்கள், ரயில்வே அதிகரிகளுக்கு ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி அறிவுறுத்தல்.

டெல்லி நிர்பயா வழக்கு
குற்றவாளியின் மறுசீராய்வு மனுவை விசாரிக்கும் அமர்வு அறிவிப்பு . உச்சநீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா அடங்கிய அமர்வு வழக்கை விசாரிக்கும்.

எதிர்கட்சிகள் மக்களை
தவறாக வழிநடத்துகிறார்கள். சிறுபான்மை மக்களின் குடியுரிமையை பறிப்பது தொடர்பான எந்தவொரு ஏற்பாடும் குடியுரிமை சட்டத்திருத்தத்தில் இல்லை –  உள்துறை அமைச்சர் அமித்ஷா.

ஜம்மு-காஷ்மீர்:
அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் அதிரடிப்படை கமாண்டோக்கள் 2 பேர் சுட்டுக்கொலை.சுந்தர்பானி எல்லைப்பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் 2 பேரும் கொல்லப்பட்டனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...