என்கவுன்டர் பற்றி திரைப்பிரபலங்கள் கருத்து
பெண் மருத்துவருக்கு நீதி கிடைத்தது: என்கவுன்டர் பற்றி திரைப்பிரபலங்கள் கருத்து
ஐதாராபாத்: தெலுங்கானாவில் கால்நடை பெண் டாக்டர் ஒருவர் வாயில் வலுக்கட்டாயமாக மது ஊற்றப்பட்டு, பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளும் போலீசாரால் இன்று(டிச.,6) என்கவுன்டர் செய்யப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தெலுங்கானா போலீசாரை அந்தமாநில மக்கள் தூக்கி வைத்து கொண்டாடி, மலர் தூவி ஆராவாரம் செய்கின்றனர். இதுகுறித்து இந்திய திரைப்பிரபலங்கள் தெரிவித்த டுவிட்டர் கருத்துக்கள்…
நடிகர் ரிஷி கபூர் : சபாஷ். தெலுங்கானா போலீஸிற்கு என் பாராட்டுகள்நடிகர் அனுபம் கெர் : பலாத்கார குற்றவாளிகள் நான்கு பேரையும் என்கவுன்டரால் சுட்டு கொன்ற தெலுங்கானா போலீசாருக்கு பாராட்டுகள்.
ஜெய்ஹோ.தயாரிப்பாளர் பன்டி எஸ் வாலியா : பலாத்கார குற்றவாளிகளுக்கு இது தான் சிறந்த தண்டனை.
நடிகை ரகுல் ப்ரீத் சிங் : பலாத்காரம் செய்துவிட்டு குற்றவாளிகள் தப்பி ஓட முடியுமா… பிரியங்கா ரெட்டிக்கு நீதி கிடைத்தது. தெலுங்கானா போலீசுக்கு நன்றி.
நடிகர் அல்லு அர்ஜூன் : நீதி கிடைத்தது
நடிகர் நாகார்ஜூனா : காலையில் எழுந்து செய்தி பார்த்தபோது நீதி கிடைத்தது.
நடிகை ஹன்சிகா : நீதி கிடைத்தது
நடிகர் ஜூனியர் என்டிஆர் : நீதி வழங்கப்பட்டது.
நடிகர் விவேக்: என்ன தவறு செய்தாலும் பாத்ரூமில் வழுக்கி விழுவதுடன் முடிந்து விடும் என்று நினைப்பவர்கள் இதோடு திருந்தி விடுவது நல்லது.: நீதி கிடைத்தது. அந்த மருத்துவ சகோதரியின் ஆன்மா அமைதியாகட்டும். நோய்வாய்ப்பட்ட புத்தி உடைய வக்கிரகாரர்களுக்கு இது ஒரு பாடம்.
நடிகை வரலட்சுமி : கடுமையான நடவடிக்கை எடுத்த போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு. இறுதியாக நீதி வழங்கப்பட்டது. இது மட்டும் போதாதது. ஒவ்வொரு பாலியல் குற்றவாளிகளும் இது போன்று தண்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுக்கப்படும். பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை என சட்டப்பூர்வமாக்க வேண்டும்.
காமெடி நடிகர் சதீஷ் : ஐதராபாத் அரசின் துணிச்சல் பிடித்திருக்கிறது. அந்த பெண்ணின் ஆன்மா சாந்தி அடையும். மற்றவர்களின் கருத்துக்களையோ, மனித உரிமை பேசுபவர்களையோ விடுங்கள்… அந்த பெண்ணின் பெற்றோருக்கு மனதின் ஓரத்தில் ஒரு சிறு நிம்மதி வருமே அது போதும்…
நடிகர் ஜெயம் ரவி: இறந்த பெண்ணின் ஆன்மா சாந்தி அடையட்டும்.: இப்போது நான் நீதி என அழைக்கிறேன். அந்த பெண்ணிற்கு நீதி கிடைத்தது.
இயக்குனர் அஜய் ஞானமுத்து : தெலுங்கானா போலீஸிற்கு பெரிய பெரிய சல்யூட். நீதி கிடைத்தது.
நடிகை இந்துஜா : நீதி தன் கடமையை செய்தது