கணித மேதையின் பரிதாப நிலைமை
பிச்சைக்காரன் போல் இருக்கும் உலகம் போற்றும் இந்த அதி மேதாவி – கணித மேதை.
14 நவம்பர்,2019இல் காலமானார். இவர் மறைவிற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்தார்.
ஆனால் இவர் உடலுக்கு இலவச ஆம்புலன்ஸ் கிடைக்கக்கூட வெகு நேரமாயிற்று.
அது சரி இவர் யார்.
இவர் பெயர் வஷிஷ்த்த நாராயண் சிங்க்!
அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கான டாக்டர் பட்டம் பெற்றவர்.
அமெரிக்காவின் சந்திரமண்டல APOLLO, விண்கலங்களுக்கான ஆராய்ச்சியின் முன்னோடி.
ஐன்ஸ்டின் தியரி தவறு என்று வாதாடியவர்.
கான்பூர் IIT யில் பயிற்சிவிப்பாளர்.
டாடா குழுமத்தில் இருந்தவர்.
1974இல் மனநோயால் பாதிக்கப்பட்ட இவரை இவரது மனைவி பிரிந்து சென்றார். அரசும் அன்புக்கரம் நீட்டவில்லை.
தனது கிராமத்தில், பொதுமக்கள் ஆதரவில், தனிமையில், உலகத்தின் மாபெரும் மனிதர் கேட்பாரற்று மரணமுற்றார்.
யாராக இருந்தாலும் பதவி இருக்கும்பொழுது வரைக்கும் தான் அவர்களுடைய மதிப்பும் மரியாதையும் ஆனால் அந்த அளவுக்கு பேசப்படுகிறது.
நன்றாக இருந்த பொழுது எவ்வளவு பெரிய விஷயங்கள் செய்திருக்கிறார் என்று அந்தத் துறை சார்ந்த வல்லுநர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் ஆனாலும் ஒருவர் கூட ஆதரவு கரம் நீட்ட வில்லை என்பது தான் கொடுமையான விஷயமாக இருக்கிறது.
பல வெளிநாடுகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக நிறைய நிறைய தன்னார்வத் தொண்டர்களும் பல நிறுவனங்களும் இதுபோன்ற மனித சேவைக்காக பெரிய அளவுகளில் நிதி உதவி செய்வதும் வழக்கமாக கொண்டு இருக்கிறது.
அப்படி நம் நாட்டில் இல்லை என்று நினைக்கும் பொழுது தான் சற்று சங்கடமான விஷயமாகவே தோன்றுகிறது. வல்லுநர்களுக்கான அங்கீகாரம் முழுமையாக கொடுக்காவிட்டாலும் சக மனிதனாக மதிப்பதே பெரிய விஷயமாக தோன்றுகிறது.
இப்பபோது பணம் மட்டும் தேடும் சூழ்நிலையில், ஒரு காலக்கட்டத்தில் அதிகமாக வசித்து வந்த கூட்டுக் குடும்பங்கள், தற்பொழுது முதியோர் இல்லங்கள் மட்டுமே அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.
அவர்களுக்கெல்லாம் புரிவதில்லை நம்முடைய சொத்தே அந்த முதியவர்கள் தான் என்று, அதனால்தான் வெறுத்து ஒதுக்கி விடுகிறார்கள். மரணம் என்பது 70 என்பதை தாண்டி 100 எல்லாம் தொட்டு இருக்கிறது ஆனால் இப்போது 50 இருந்து 60 வயது வரை இருந்தாலே பெரிய விஷயமாக தோன்றுகிறது அதிலும் மாறிவரும் உணவு முறையும் காரணம். அதிநவீன காலகட்டத்தில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தேறிய இருப்பது சற்றே வேதனையான விஷயம் என்பது மனதை நெருடுகிறது…