இன்றைய ராசி பலன்கள் – 05-12-2019 – வியாழக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம்

பொதுநலத்திற்காக நன்கொடைகள் அளித்து மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்திற்கான மருத்துவ செலவுகள் நேரிடலாம். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். உயர் அதிகாரிகளுடன் சிநேகிதம் உண்டாகும். திருமண வரன்கள் சாதகமாக அமையும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அஸ்வினி : மனமகிழ்ச்சியான நாள்.

பரணி : சிநேகிதம் உண்டாகும்.

கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

—————————————


ரிஷபம்

அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். எதிலும் நிதானத்துடனும், பொறுமையுடனும் செயல்பட வேண்டும். திருமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். பிறருக்கு உதவும்போது எச்சரிக்கையுடன் செயல்படவும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

கிருத்திகை : எண்ணங்கள் மேலோங்கும்.

ரோகிணி : செயல்களில் கவனம் வேண்டும்.

மிருகசீரிஷம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.

—————————————


மிதுனம்

பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் உங்களின் மரியாதை உயரும். சொந்த பந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய எண்ணங்களாலும் சாதகமான முயற்சியாலும் பொருட்சேர்க்கை உண்டாகும். பங்காளிகளுக்கு இடையேயான உறவுநிலை மேம்படும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.

திருவாதிரை : மரியாதை உயரும்.

புனர்பூசம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.

—————————————


கடகம்

திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். புதிய நபர்களின் நட்புகளால் தனலாபம் அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். சபைகளில் ஆதரவு பெருகும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.

பூசம் : இலாபம் உண்டாகும்.

ஆயில்யம் : ஒற்றுமை மேலோங்கும்.

—————————————


சிம்மம்

மாணவர்களுக்கு கல்வி பயிலும் விதங்களில் மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் சில காலதாமதம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அனுசரித்து செல்லவும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். பேச்சில் கவனம் வேண்டும்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : மாற்றமான நாள்.

பூரம் : அனுசரித்து செல்லவும்.

உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

—————————————


கன்னி

மனை சம்பந்தமான தொழில் முயற்சிகள் நல்ல பலன்களை தரும். வாகனப் பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். தாயின் ஆதரவால் சாதகமான சூழல் அமையும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும்.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

உத்திரம் : முயற்சிகள் ஈடேறும்.

அஸ்தம் : ஆசிகள் கிடைக்கும்.

சித்திரை : நினைவாற்றல் மேலோங்கும்.

—————————————


துலாம்

போட்டிகளில் இலாபம் அடைவீர்கள். இசைக்கலைஞர்களுக்கு சாதகமான நிலை உருவாகும். திடீர் யோகத்தால் எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். மனை விருத்திக்கான பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : தென்வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

சித்திரை : இலாபம் உண்டாகும்.

சுவாதி : கவலைகள் குறையும்.

விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும்.

—————————————


விருச்சகம்

பிள்ளைகளின் செயல்பாட்டால் இலாபம் உண்டாகும். புதியவற்றை கண்டறிந்து புகழப்படுவீர்கள். புதிய நபர்களின் நட்பால் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். சக பணியாளர்களால் தொழிலில் சாதகமான சூழல் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகளால் இலாபம் அதிகரிக்கும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : புகழப்படுவீர்கள்.

அனுஷம் : அபிவிருத்தி உண்டாகும்.

கேட்டை : இலாபம் அதிகரிக்கும்.

—————————————


தனுசு

பூர்வீக சொத்துக்களில் இடர்பாடுகள் தோன்றி மறையும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் அடைவீர்கள். தொழிலில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். இளைய சகோதரர்களால் சுபவிரயம் ஏற்படும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

மூலம் : இடர்பாடுகள் மறையும்.

பூராடம் : இலாபம் கிடைக்கும்.

உத்திராடம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.

—————————————


மகரம்

இளைய சகோதரர்களிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும். உடல்நலத்தில் ஏற்பட்ட உபாதைகள் குறையும். வெளிநாட்டு தொழில் முயற்சிகளில் எண்ணிய பலன்கள் கிடைக்கும். மறைப்பொருள் சம்பந்தமான ஞானத்தேடல் உண்டாகும். நண்பர்களிடம் உரையாடும்போது பேச்சுக்களில் கவனம் வேண்டும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...