தனி தீவில் ஹிந்து நாடு: நித்தியானந்தா முயற்சி?

 தனி தீவில் ஹிந்து நாடு: நித்தியானந்தா முயற்சி?
தனி தீவில் ஹிந்து நாடு: நித்தியானந்தா முயற்சி?
புதுடில்லி: பிரபல சாமியார் நித்தியானந்தா, தனி தீவில் ஹிந்துக்களுக்கான தனி நாடு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நித்தியானந்தாவுக்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் உள்ளன. உலகம் முழுவதும் நித்தியானந்தாவின் சிஷ்யர்கள், ஆசிரமங்களில் பணிவிடை செய்து வருகின்றனர். இந்நிலையில், ஹிந்துக்களுக்காக ‘கைலாசா’ என்ற நாட்டை உருவாக்குவதாகவும், அது எல்லைகள் அற்ற ஹிந்து நாடாக இருக்கும் எனவும் நித்தியானந்தா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்காக ‘கைலாசா’ என்ற இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. ஹிந்து மதத்தை பின்பற்றும் அனைவரும் இந்த கைலாசா நாட்டின் குடிமகன் ஆகலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நாட்டிற்கு செல்ல தனி பாஸ்போர்ட், கொடி, ஆகியவற்றையும் உருவாக்கியுள்ளனர். இந்த நாட்டின் பிரதமராக நித்தியானந்தா இருப்பார் எனவும் அவரின் கீழ் 10 துறைகள் இருக்கும் எனவும் அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...