வரலாற்றில் இன்று ( 12.05.2024)

 வரலாற்றில் இன்று ( 12.05.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மே 12  கிரிகோரியன் ஆண்டின் 132 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 133 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 233 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

254 – முதலாம் ஸ்தேவான் 23-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
907 – சீனாவில் முன்னூறு ஆண்டு கால ஆட்சியின் பின்னர் தாங் அரசமரபு ஆட்சி இழந்தது.
1191 – இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் சைப்பிரசில் பெரங்காரியா என்பவரைத் திருமணம் புரிந்தார்.
1551 – அமெரிக்காக்களின் மிகப் பழமையான பல்கலைக்கழகம், சான் மார்க்கோசு தேசியப் பல்கலைக்கழகம், பெரு, லிமா நகரில் அமைக்கப்பட்டது.
1588 – சமயங்களுக்கான பிரெஞ்சுப் போர்: முதலாம் என்றி பாரிசு நகரை அடைந்து, கிளர்ச்சி ஆரம்பித்ததை அடுத்து பிரான்சின் மூன்றாம் என்றி மன்னர் பாரிசில் இருந்து வெளியேறினார்.
1780 – அமெரிக்கப் புரட்சிப் போர்: தென் கரொலைனாவின் சார்ல்ஸ்டன் நகரத்தை பிரித்தானியப் படை கைப்பற்றியது. அமெரிக்க விடுதலைப் படையின் மிகப்பெரும் தோல்வியாக இது கருதப்படுகிறது.
1784 – செப்டம்பர் 3 இல் எழுதப்பட்ட பாரிசு உடன்படிக்கை அமுலுக்கு வந்தது.
1797 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் இத்தாலியின் வெனிசு நகரைக் கைப்பற்றினான்.
1821 – கிரேக்க விடுதலைப் போருக்கான முதல் சமர் வால்தெத்சி நகரில் துருக்கியருக்கு எதிராக இடம்பெற்றது.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் பாடன் ரூச்சைக் கைப்பற்றின
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியாவில் ஸ்பொட்சில்வேனியா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ஆயிரக்கணக்கான கூட்டமைப்பு மற்றும் கூட்டணி படையினர் இறந்தனர்.
1881 – துனீசியா பிரான்சின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.
1888 – தென்கிழக்காசியாவில், வடக்கு போர்னியோ பிரித்தானியாவின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.
1922 – 20 தொன் விண்கல் வேர்ஜீனியாவில் வீழ்ந்தது.
1926 – இத்தாலியில் தயாரிக்கப்பட்ட நோர்ச் வான்கப்பல் வட முனைக்கு மேலாகச் சென்ற முதலாவது வானூர்தி ஆகும்.
1937 – ஆறாம் ஜோர்ஜ், எலிசபெத் மகாராணி பிரித்தானியாவின் ஆட்சியாளர்களாக முடிசூடினர்.
1941 – உலகின் முதலாவது நிரலொழுங்கு, தானியங்கிக் கணினி Z3 அறிமுகப்படுத்தப்பட்டது.
1942 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க எண்ணெய்க் கப்பல் வர்ஜீனியா மிசிசிப்பி ஆற்றில் செருமானிய யூ-507 நீர்மூழ்கியினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
1949 – பனிப்போர்: சோவியத் ஒன்றியம் பெர்லின் மீதான முற்றுகையை நிறுத்தியது.
1965 – சோவியத் ஒன்றியத்தின் லூனா 5 விண்கலம் சந்திரனில் மோதியது.
1978 – சாயிரில், கொல்வேசி நகரைத் தீவிரவாதிகள் கைப்பற்றினர்.
1981 – ஐரியக் குடியரசுப் படையைச் சேர்ந்த தன்னார்வலர் பிரான்சிசு இயூசு சிறையில் உண்ணாநோன்பிருந்து இறந்தார்.
1982 – போர்த்துகலில் திருத்தந்தை இரண்டாவது ஜோன் போலைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
1998 – இந்தோனேசியாவில் திரிசக்தி பல்கலைக்கழகத்தில் நான்கு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து அங்கு கலவரங்கள் ஆரம்பமாயின.
2002 – முன்னாள் அமெரிக்க அரசுத்தலைவர் ஜிம்மி கார்ட்டர் கியூபாவுக்கு ஐந்து-நாள் பயணம் மேற்கொண்டு கியூபா வந்தார்.
2003 – ரியாத் நகரில் அல் காயிதா மேற்கொண்ட தாக்குதல்களில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – பிரேசில், சாவோ பாவுலோ நகரில் மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது 150 பேர் உயிரிழந்தனர்.
2008 – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 8.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 69,000 பேர் உயிரிழந்தனர்.
2010 – லிபியாவின் திரிப்பொலி பன்னாட்டு விமான நிலையத்துக்கருகில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 103 பேர் உயிரிழந்தனர், ஒருவர் உயிர் தப்பினார்.
2015 – நேபாளத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 218 பேர் உயிரிழந்தனர்.
2017 – பணயத் தீநிரல் உலக அளவில் ஏறத்தாழ 400 ஆயிரம் கணினிகளைத் தாக்கியது.

பிறப்புகள்

1820 – புளோரன்ஸ் நைட்டிங்கேல், இத்தாலிய-ஆங்கிலேய செவிலி, சமூக நீர்த்திருத்தவாதி (இ. 1910)
1828 – டேன்டி கெய்பிரியல் ரோசட்டி, ஆங்கிலேயக் கவிஞர், ஓவியர் (இ. 1882)
1843 – தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ், பிரித்தானிய பாளி அறிஞர் (இ. 1922)
1866 – லியோபோல்டு மேன்டிக், கப்புச்சின் சபையை சேர்ந்த குரோவாசிய கத்தோலிக்க அருட்பணியாளர் (இ. 1942)
1891 – வெ. துரையனார், தென்னாப்பிரிக்க-இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1973)
1895 – ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, இந்திய-அமெரிக்க மெய்யியலாளர் (இ. 1986)
1899 – இந்திரா தேவி, லாத்விய யோகா நிபுணர் (இ. 2002)
1905 – அல்பர்ட் பீரிசு, இலங்கையின் நாடாளுமன்ற சபாநாயகர் (இ. 1967)
1910 – டோரதி ஓட்ச்கின், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய உயிரிவேதியியலாளர் (இ. 1994)
1912 – மாயவரம் வி. ஆர். கோவிந்தராஜ பிள்ளை, தமிழக கருநாடக வயலின் இசைக் கலைஞர் (இ: 1979)
1913 – தாத்தேயசு அகேகியான், ஆர்மேனிய-சோவியத் வானியற்பியலாளர் (இ. 2006)
1917 – பாக்கீர் மாக்கார், இலங்கை அரசியல்வாதி (இ. 1997)
1924 – சேக் சின்ன மௌலானா, தமிழக நாதசுவரக் கலைஞர் (இ. 1999)
1926 – எம். எஸ். எஸ். பாக்கியம், தென்னிந்தியத் திரைப்பட, நாடக நடிகை
1932 – டெரிக் மால்கம், பிரித்தானிய திரைப்பட விமரிசகர்
1942 – பான் இயூ தெங், மலேசிய மனித உரிமை போராளி (இ. 2010)
1947 – மைக்கல் இக்னேட்டியஃவ், கனடிய அரசியல்வாதி
1952 – ப. ரங்கராஜன் குமாரமங்கலம், இந்திய அரசியல்வாதி (இ. 2000)
1954 – எடப்பாடி க. பழனிசாமி, தமிழகத்தின் 8-வது முதலமைச்சர்
1955 – கரு. அழ. குணசேகரன், தமிழக எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர், பாடகர் (இ. 2016)
1962 – எமிலியோ எஸ்டீவ்ஸ், அமெரிக்க நடிகர்
1964 – பிரரே மோறேல், பிரெஞ்சு இயக்குநர், ஒளிப்படவியலாளர்
1977 – மரியாம் மீர்சாக்கானி, ஈரானியக் கணிதவியலாளர் (இ. 2017)
1981 – ராமி மலேக், அமெரிக்க நடிகர்
1988 – மார்செலோ, பிரேசில் காற்பந்தாட்ட வீரர்

இறப்புகள்

1884 – பெட்ரிக் சிமேத்தானா, செக் இசையமைப்பாளர் (பி. 1824)
1910 – வில்லியம் ஹக்கின்ஸ், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1824)
1952 – யு. ராமா ராவ், தென்னிந்திய அரசியல்வாதி
1970 – நெல்லி சாக்ஸ், நோபல் பரிசு பெற்ற செருமானியக் கவிஞர் (பி. 1891)
1973 – பிரான்சஸ் மரியன், அமெரிக்க எழுத்தாளர், ஊடகவியலாளர் (பி. 1888)
1980 – சி. ஏ. முகிலன், தமிழ்த் திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் (பி. 1933)
1980 – பெட்டி நெசுமித் கிரகாம், அமெரிக்கத் தட்டச்சாளர், வணிகக் கலைஞர் (பி. 1924)
1984 – மு. அ. முத்தையா, தமிழக அரசியல்வாதி (பி. 1905)
1994 – எரிக் எரிக்சன், செருமானிய-அமெரிக்க உளவியலாளர் (பி. 1902)

சிறப்பு நாள்

உலக செவிலியர் நாள்

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...