மாநகராட்சி கழிவறை கடைகளை நடத்த திருநங்கைகளுக்கும் ஒதுக்கீடு
திருச்சி மாநகராட்சி கழிவறை கடைகளில் எங்களுக்கும் ஒதுக்கீடு வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் திருநங்கைகள் மனு அளித்துள்ளனர். திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடந்தது. ஆணையர் சிவசுப்பிரமணியன் மக்களிடம் மனுக்களை பெற்றார். திருநங்கை அமைப்பு தலைவர் ரயில் நகர் கஜோல் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருந்தாவது , திருச்சி மத்திய ஒருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மாநகராட்சிக்கு உட்பட்டு கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடம் மற்றும் கடைகள் உள்ளது.
இதனை நடத்த திருணங்களுக்கும் ஒதுக்கீடு வழங்க வேண்டும். பொது கழிப்பிடத்தை நாங்கள் நன்கு பராமரிப்போம் எம்மக்களின் சுய உதவி குழு மூலம் நடத்த பரிசீலனை செய்து ஒதுக்கீடு செய்து தர வேண்டும். என்று குறிப்பிட்டுயிருந்தார்.