பென் நெவிஸ் மலைச் சிகரம்/தொடர்பகுதி (1)

 பென் நெவிஸ் மலைச் சிகரம்/தொடர்பகுதி (1)

தொடர்
பகுதி ( )

பென் நெவிஸ் மலைச் சிகரம்

இது என்னோட முதல் கட்டுரை. அதுவும் தமிழில்.
பயணகட்டுரை அல்ல. பயம் நிறைந்த மலை ஏற்றம் பற்றியது.

இங்கிலாந்து நாட்டிற்கு வந்த இரண்டரை ஆண்டு காலத்தில் பெரிதாய் எந்த ஒரு தருணங்களையும் நான் (அரவிந்த் )எனக்கென கொண்டதில்லை.

நண்பர் முரளி உலகை சுற்றும் வாலிபராகவே இருந்துள்ளார், அவருடைய ஐரோப்பிய பயணங்களின் அனுபவங்களை பக்கம் நின்று கேட்டுத் தெரிந்து கொள்வதில் ஆர்வமும் அவ்விடங்களின் புகைப்படங்களை காண்பதிலும் அலாதி மகிழ் கொண்டுள்ளேன்.

ஆசை அதிகமென்றாலும் கருமியாய் வாழந்த காலம் இன்னும் என்னை கடித்து கொண்டுதான் இருக்கிறது எனவே ஆசைகளை அடிக்கடி அப்புறப் படுத்தும் வேலையும் நடந்து கொண்டுதான் இருந்தது.

தவிர்க்க முடியா சில காரணங்களால், அந்த அனுபவ ஆசையை நானும் தேடி ஓட வேண்டிய நேரம் இது.

ஐரோப்பா இராச்சியத்தில் உயரமான மலையாக கருதப்படுவது “பென் நெவிஸ்” அதில் மலையேற்றம் செய்யலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.
பென் நெவிஸ் என்பது
,
யுனைடெட் கிங்டம் மற்றும் பிரிட்டிஷ் தீவுகளில் உள்ள மிக உயரமான மலையாகும் . இதன் உச்சிகடல் மட்டத்திலிருந்து 1,345 மீட்டர் (4,413 அடி) உயரத்தில் உள்ளது மற்றும் 739 கிலோமீட்டர்கள் (459 மைல்கள்) எந்த திசையிலும் மிக உயர்ந்த நிலம் என சொல்லப்படுகிறது
பென் நெவிஸ், ஃபோர்ட் வில்லியம் நகருக்கு அருகில் உள்ள லோச்சபெரின் ஹைலேண்ட் பகுதியில் உள்ள கிராம்பியன் மலைகளின் மேற்கு முனையில் உள்ளது.
இந்த மலை ஒரு பிரபலமான இடமாகும், இது வருடத்திற்கு 130,000 ஏறுதல்களை ஈர்க்கிறது, இதில் முக்கால்வாசி பேர் க்ளென் நெவிஸின் மலைப்பாதையைப் பயன்படுத்துகின்றனர் 700-மீட்டர் (2,300 அடி) வடக்கு முகமான பாறைகள் ஸ்காட்லாந்தில் மிக உயரமானவையாகும், இது ஏறுபவர்கள் மற்றும் மலையேறுபவர்களுக்கு அனைத்து சிரமங்களையும் தரும் உன்னதமான போராட்டங்கள் மற்றும் பாறை ஏறுதல்களை வழங்குகிறது . இவை ஸ்காட்லாந்தில் பனி ஏறும் முக்கிய இடங்களாகும் .
ஒரு பழங்கால எரிமலையின் இடிந்து விழுந்த குவிமாடமான உச்சிஇது., 1883 மற்றும் 1904 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தொடர்ச்சியாக பணியாளர்கள் பணியாற்றிய ஒரு கண்காணிப்பகத்தின் இடிபாடுகளைக் கொண்டுள்ளது.

பென் நெவிஸ் என்பது ஸ்காட்டிஷ் கேலிக் பெயரான பெயின் நிபீஸின் ஆங்கிலமயமாக்கல் ஆகும் . பீன் என்பது ‘மலை’ என்பதற்கான பொதுவான ஸ்காட்டிஷ் கேலிக் வார்த்தையாக இருந்தாலும் , நிபீஸின் தோற்றம் தெளிவாக இல்லை.
Nibheis முந்தைய பிக்டிஷ் வடிவத்தை பாதுகாக்கலாம், * Nebestis அல்லது * Nebesta , செல்டிக் ரூட் * neb , அதாவது ‘மேகங்கள்’ இதனால் ‘மேகமூட்டமான மலை’.
Nibheis என்பது ‘ சொர்க்கம் ‘ (நவீன ஸ்காட்டிஷ் கேலிக் வார்த்தையான neamh என்பதன் பொருள் ‘பிரகாசமான, பிரகாசிக்கிறது’ என்பதோடு தொடர்புடையது) மற்றும்’ஒரு மனிதனின் தலையின் மேல்’ எனப் பொருள்படும் nèamh என்ற வார்த்தைகளுடன் மூலமும் இருக்கலாம்எனவே, Beinn Nibheis , “மேகங்களில் தலை கொண்ட மலை”,அல்லது ‘வானத்தின் மலை’ என்பதிலிருந்து பெயின் நீம்-பதைஸ் என்பதிலிருந்து பெறலாம்
இது போதும் என நினைக்கிறேன். இது பற்றி லாம் நாங்கள் முதலில் அறிய வில்லை. பின்னர் தான் தெரிந்து கொண்டோம்.

நண்பர் முரளி அம்மலையில் ஏற்கனவே மலையேற்றம் செய்தவர் அவர் அறிவுரையின் படியே இதை நாமும் செய்யலாம் என்று மாதங்கள் முன்பே முடிவாகியது. முரளி, விக்கி, சூரியா மற்றும் நான், என நான்கு நபர் என முடிவாகி அதற்கான ஆயுத்தம் அவ்வப்போது நடந்து கொண்டிருந்தது.
நாங்க இங்கே லீட்ஸ் U.K ல் தங்கியிருக்கிறோம். நால்வரும் சமவயது இளைஞர்கள். ஏறத்தாழ26 to 30 வயது. அனைவரும் தமிழ்நாடு தான். எங்களின் ஐ டி துறை இங்கே அனுப்பியிருக்கு

மார்ச் 16ம் தேதி{16.03.2024 }மலையேற்றம் என்று முடிவாகியது, அம்மலைபகுதிக்கு அது குளிர் காலத்திற்கும் வசந்த காலத்திற்கும் இடைப்பட்ட காலம். மனதளவில் முதலில் தாயார் செய்து கொண்டோம் mஏனெனில் பனிப்பொழிவு அவ்விடத்தில் அதிகம் இருக்கும் என அன்பர்களின் அறிவுரைகளை ஏற்று முரளயிடம் ஆலோசித்து மலையேற்றத்திற்கு தேவையான அனைத்தும் வாங்கிக்கொண்டோம்.

இரும்பு குச்சி, மலையேற்றத்திற்கான பிரத்யேக காலணி, அந்த காலணியில் மாட்ட ஓர் இரும்பு சங்கிலி (பனிப்பொழிவில் பலமான அடிவைப்பதற்கு) என பல்வேறு பொருட்கள் தோல்ப்பைக்குள் ஏறியது.
நாங்க தங்கியிருந்தது லீட்ஸ்.
விடிந்தால் மலையேற்றம். அங்கிருந்து ஆறு மணி நேரத்திற்கு குறையாமல் வாகனம்(கார் தான் )ஓட்டி பென் நெவிஸ் தங்குமிடம் அடைந்தோம். உற்சாகம் உறக்கம் வரவிடவில்லை இருந்தும் நான்கு மணி நேரம் கலைப்பு கண்களை மூடச் செய்தது.

விழித்த நேரம் உறக்கம் முழுவதும் கலைந்து உற்சாகம் உச்சம் தொட்டு நின்றது, அனைத்தும் எடுத்து கொண்டு மலையடிவாரத்தை அடந்து முடிவு செய்த படி முரளியும், சூரியாவும் முன்னே செல்வதென்றும் (சுறுசுறுப் பானவர்கள் ஆதலால் அவர்கள் வேகத்திற்கு தடையாக நிற்க விரும்பவில்லை) நானும் விக்கியும் பொடி நடையாய் பின் தொடர்ந்து செல்ல மலைப்பயணம் ஆரம்பித்தது

மூன்றடி அகலத்தில் தான் பாதை இருந்தது, பாதையல்ல பாறைக் கற்களின் அடுக்குகள் இருந்தது. நாங்கள் தொடங்கிய நேரம் கதிரவன் நெற்றி நேருக்கு நின்று பொசிக்கி கொண்டிருந்தான். குளிரை எதிர்ப்பார்த்து கடினமான மேல் உடுப்பு அணிந்து ஆரம்பித்த மலையேற்ற மைல் தூரம் கடப்பதற்குள் வியர்த்து கொட்டியது.
மேல்உடுப்பும் தோல்ப்பையும் எடையை கூட்ட , அதன் விளைவாய் எடையும் ஏரியது.

பாதை நெடுகிலும் பாறை நெடுகிலும் அருவிகள் அவ்வப்போது அவை எதிர்நோக்கியது மக்களின் களைத்து போன இறைக்கும் மூச்சு.

நிமிடங்கள் கடந்தது கொண்டு வர வந்த வழிகளை அவ்வப்போது கைப்பேசியில் படம் எடுத்து கொண்டும், மனத்தில் படமாக்கி கொண்டும் வந்தேன்.

கற்கள் பாதை மண் பாதையாகின,
மண் பாதை பாறைப் படிகளாகின,
நான்கடி பாதை இரண்டடி பாதையாகின,
பாறைப் படிகள் வெறும் பாறையானது…

நடக்க நடக்க வியர்வை பெருமளவில் கொட்டியது,
நின்று ரசிக்கையில் குளிர்காற்று வீசியது,
மலையின் கால் வாசி தூரம் நடந்து முடித்த பின் வந்த பாதை மறைந்து போகுமளவு
அடுத்த மலை வந்தடைந்தோம்…

மூச்சு இறைப்பு அதிகமானது,
வறண்ட தொண்டை நீர் தேடியது,
நின்ற இடத்தில் கொட்டிய அருவியின் ஓசை, இக்கனமும் மனதில் நிற்கிறது. சலசலவென ஆர் ப்பரி த்து கொட்டும் அருவியின் சத்தம் என மனதுக்கு மயக்க அமைதி தந்தது.

அவ்விடம்வரை நாங்கள் வந்த செங்குத்தான பாதை குறைந்து அரைமைல் தூரத்திற்கு சமவெளியாய் இருந்தது. மனதில் இந்த தூரத்தை எளிதில் கடக்கலாம் என எண்ணிக்கொண்டிருக்க கிடைத்த அதிர்ச்சிதான் அந்த பலத்த குளிர்காற்று.

ஆம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிரின் அளவு அதிகரித்தது. சமவெளியில் பாதிதூரம் கடக்கவே எங்களுக்காக காத்திருந்த முரளியையும் சூரியையும் அடைந்தோம். அப்பவே உணர்ந்தோம் இனி இந்த குளிர் அதிகரிக்க போகிறதென்று எனவே மேல்உடுப்பை உடுத்தி கொண்டோம்.

நடையை தொடந்தோம் nஅடுத்த மலையின் அடிவாரத்தை அடைந்தோம். வழக்கம் போல் முரளியும் சூரியும் விறு விறு நடையை கட்டினார்கள், நானும் விக்கியும் பொறு மையாகவே நடையை கட்டினோம். எனக்கு அந்த இடங்களை சுற்றி பார்க்க பாரக்க மனதில் அளவில்லா ஆனந்தம்.

மேகங்களுக்கும் எங்களுக்குமான் தொலைவும் தொலைவேயில்லை எனும் அளவுக்கு உயரத்தில் நடந்து கொண்டிருந்தோம். சமவெளி முடிந்து செங்குத்தான மலை தொடங்கியது அதன் நீட்சியாக கற்கள் பாதையும் மண்பாதையும் கலந்திருந்தது.

கதிரவனும் அடிக்கடி ஒளி ந்து மறைந்து விளையாடினான் மனதிற்குள் மகிழ்ச்சி பொங்க பொங்க நடந்து கொண்டிருந்தேன்.

குளிரின் தாக்கம் மிக ஆரம்பித்தது, அதன் நீட்சியாய் கையுறை கையேறியது.நடையின் வேகம் காற்றால் குறைய ஆரம்பித்தது. சற்றே தூரத்தில் முரளியும், சூரியும் அமர்ந்திருப்பதை கண்டோம், களைப்புக்கான ஓய்வாய் இருக்க வாய்ப்பு இல்லை என்தெரியும் ஏதேனும் கூறக் காத்திருக்கிறார்கள் என நினைத்தேன். அவர்கள் ஓர் பாறை கற்களின் இடையில் ஓடும் அருவியை கடந்து அமரந்திருந்தனர்.

கைப்பேசியில் அவ்விடம்வரை மட்டும் படப்பதிவு செய்து கொண்டு வந்த நான் அருவியின் சத்தத்தில் அவர்கள் பேச்சு கேட்காது முழி க்க, முகப்பாவனையை உணர அலைபேசியை பையில் வைத்துவிட்டு பாறைகளில் பார்த்து பார்த்து நடந்தேன் அப்படி நடந்தும் வழுக்கிட விழுந்தேன், கையுறை நனைய கற்களை மறுபடி பக்குவமாய் பார்த்து நடந்து தட்டு தடுமாறி அருவியை கடந்து அவர்களை அடைந்தேன்.

நான் விழுந்ததை பார்த்த விக்கி விழித்துகொள்ள இன்னும் நிதனமாய் எந்த விழுக்காடும் இன்றி வந்துசேர அப்பொழுதுதான் தெரிந்தது. முரளியும் கீழே விழவே அமரந்திருந்திருக்கிறார்கள் என அறிந்தேன்.

வழுக்கிவிட காரணம் உறைபனி என்பதை உணர்ந்தோம் அனைவரும் அவரவர் காலணியில் இரும்பு சங்கிலி யை முரளியின் அறிவுரையின் படி மாட்டிக்கொண்டோம். ஏனெனில் மலையின் பாதிதூரத்தின் பாறையிலேயே உறைபனி உள்ளதெனில் உச்சியில் நிச்சயம் பனிப்படர்வு இருக்குமென நினைத்தோம்.

அமரந்து அந்த சங்கிலியை அணிய விருப்பமில்லை எனக்கு. ஏனெனில் மலையுச்சி வரை பொறு மையாக சென்றாலும் ஒருகாலும் எங்கேயும் அமராது செல்ல வேண்டும் என நினைத்தேன்(ஒரு இளைஞ்சனின் கர்வம்தான் ). ஆனால் அமர் ந்தே காலணியில் சங்கிலி யை மாட்ட வேண்டிய சூழல்.

அனைவரும் பனியில் நடப்பதற்கும் தயாரானோம். பையில் இருந்த இரும்பு குச்சியும் கைகளுக்கு வந்தது. கைகளில் இருந்த கைப்பேசியோ சட்டைபைக்குள் சென்றது.

ஏற்றத்தின் இரண்டாம் பகுதி ஆரம்பித்தது…
{தொடரும் }
_ அரவிந்குமார் அண்ணாத்துரை(லீட்ஸ். U. K)

uma kanthan

1 Comment

  • பென்-நெவிஸ் மலைச் சிகரம் பயணம் மலைக்க வைத்தது
    ஏற்றத்தின் இரண்டாம் பகுதிக்காக ஏக்கத்துடன் நானும் நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...