இன்றைய ராசி பலன்கள் 22-11-2019 வெள்ளிக்கிழமை

இன்றைய ராசி பலன்கள் 22-11-2019 வெள்ளிக்கிழமை 

மேஷம்
உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புத்திரர்களால் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எடுத்துச்செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். மறைமுக எதிர்ப்புகளின் மூலம் தடை, தாமதங்கள் தோன்றி மறையும். பயணங்களின்போது நிதானத்துடன் செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : விவாதங்களை தவிர்க்கவும்.
பரணி : கவனம் வேண்டும்.
கிருத்திகை : நிதானத்துடன் செல்லவும்.
—————————————
ரிஷபம்
உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தடைபட்டு போன சுபகாரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலை ஏற்படும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
ரோகிணி : அனுகூலமான நாள்.
மிருகசீரிஷம் : பாராட்டப்படுவீர்கள்.
—————————————
மிதுனம்
மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளை வீழ்த்தி வெற்றி பெறுவீர்கள். உறவினர்களிடம் சூழ்நிலைக்கு தகுந்தவாறு அனுசரித்து செல்லவும். தாயாரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிஷம் : தன்னம்பிக்கை மேம்படும்.
திருவாதிரை : வெற்றி பெறுவீர்கள்.
புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.
—————————————
கடகம்
சிறு தூரப் பயணங்களின் மூலம் புதுவிதமான மாற்றங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். கொடுத்த வாக்குகளை காப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : மாற்றங்கள் உண்டாகும்.
பூசம் : ஆதரவான நாள்.
ஆயில்யம் : திறமைகள் வெளிப்படும்.
—————————————
சிம்மம்
குடும்பத்தில் புதியவர்களின் வருகையால் மனமகிழ்ச்சி உண்டாகும். மனை சார்ந்த செயல்பாடுகளில் லாபம் அதிகரிக்கும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மற்றும் அதற்கான எண்ணங்கள் மேம்படும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகளை உருவாக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : லாபம் அதிகரிக்கும்.
உத்திரம் : எண்ணங்கள் மேம்படும்.
—————————————
கன்னி
திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த முடிவினை அடைய அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவங்கள் மாற்றமான சூழலை உண்டாக்கும். உடன் பிறந்தவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.
சித்திரை : கவனம் வேண்டும்.
—————————————
துலாம்
சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான செயல்களில் லாபம் கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை பிறக்கும். சுபக்காரியங்கள் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். மக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
சித்திரை : லாபம் கிடைக்கும்.
சுவாதி : ஒற்றுமை பிறக்கும்.
விசாகம் : முன்னேற்றமான நாள்.
—————————————
விருச்சிகம்
ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் அகலும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். சுயதொழில் மேற்கொள்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
விசாகம் : முடிவுகள் கிடைக்கும்.
அனுஷம் : இழுபறி அகலும்.
கேட்டை : சாதகமான நாள்.
—————————————
தனுசு
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். வேலையாட்களுடன் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகளால் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : செலவுகள் அதிகரிக்கும்.
பூராடம் : எண்ணங்கள் ஈடேறும்.
உத்திராடம் : கவனம் வேண்டும்.
—————————————
மகரம்
எந்தவொரு செயலையும் சிந்தித்து செய்வது நன்மை அளிக்கும். தொழிலில் அபிவிருத்தி தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். 
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
—————————————
கும்பம்
கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்து கொள்ளவும். உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த ஆதரவுகள் காலதாமதமாக கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் மற்றும் உடல் சோர்வு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
சதயம் : காலதாமதமாகும்.
பூரட்டாதி : உடல்சோர்வு உண்டாகும்.
—————————————
மீனம்
உறவினர்களிடமிருந்து சுபச்செய்திகள் கிடைக்கும். குடும்ப பெரியவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளிவட்டார தொடர்புகள் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் புதுவிதமான மாற்றங்களை உருவாக்கும். நிர்வாகம் சமந்தப்பட்ட முடிவுகளில் நற்பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : சுபச்செய்திகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : அனுகூலமான நாள்.
ரேவதி : மாற்றங்கள் உண்டாகும்.
———————————–

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...