நடுத்தர மக்களுக்கும் மருத்துவக் காப்பீடு: மத்திய அரசு

 நடுத்தர மக்களுக்கும் மருத்துவக் காப்பீடு: மத்திய அரசு

நடுத்தர மக்களுக்கும் மருத்துவக் காப்பீடு: மத்திய அரசு

ஏழை எளிய மக்களுக்கான ஆயுஷ்மன் பாரத் எனப்படும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு, அடுத்தகட்டமாக நடுத்தர மக்களுக்கான புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.புதிய இந்தியாவுக்கான சுகாதார முறை என்ற திட்டத்தை நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கியுள்ளது. ஏழை எளிய மக்களுக்காக மருத்துவக் காப்பீட்டு திட்டம் அமலில் உள்ள நிலையில், நாடு முழுவதிலும் நடுத்தர மக்களுக்கான எந்த ஒரு சுகாதாரத் திட்டமும் இல்லை என்பதை நிதி ஆயோக் சுட்டிக் காட்டியுள்ளது. இதனை ஏற்று, பிரதமர் மோடி விரைவில் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுஷ்மன் பாரத் திட்டத்திற்கு நிகராக இத்திட்டம் இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதன்மூலம் நடுத்தர மக்களில் 50 சதவீதம் பேர் பயன் அடைவார்கள் என்று மத்திய அரசு கருதுகிறது. மாதம் 200 அல்லது 300 ரூபாய் காப்பீட்டு பிரிமியம் தொகை செலுத்துவதன் மூலம் நடுத்தர மக்களுக்கு உரிய மருத்துவ சேவை கிடைக்க இத்திட்டம் வழிவகுக்கும்.

வசதி படைத்த மக்கள் தங்கள் மருத்துவச் செலவுகளை தாங்களே செய்ய முடியும் என்பதையும் நிதி ஆயோக் சுட்டிக் காட்டியுள்ளது. ஆனால் ரத்த அழுத்தம், நீரிழிவு புற்றுநோய், முதுமையால் வரும் உடல் நல பாதிப்புகள் போன்ற பல்வேறு நோய்களில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் நடுத்தர மக்கள், அதற்கான மருத்துவ செலவுகளை ஈடுசெய்ய முடியாமல் போராடிக் கொண்டிருப்பதையும் இத்திட்டம் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...