வரலாற்றில் இன்று (06.03.2024 )

 வரலாற்றில் இன்று (06.03.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பoregon ducks jersey kansas state football uniforms fsu jersey florida jersey miami hurricanes jersey custom made football jerseys Florida state seminars jerseys Florida state seminars jerseys detroit lions jersey,green bay packers jersey,eagles kelly green jersey,jersey san francisco 49ers College Football Jerseys keyvone lee jersey fsu jersey deuce vaughn jersey brandon aiyuk jersey ohio state jersey தை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மார்ச் 6 கிரிகோரியன் ஆண்டின் 65 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 66 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 300 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

632 – முகம்மது நபி தமது இறுதிப் பேருரையை நிகழ்த்தினார்.
845 – இசுலாமைத் தழுவ மறுத்த 42 பைசாந்திய அரசு அதிகாரிகள் ஈராக்கின் சாமரா நகரில் தூக்கிலிடப்பட்டனர்.
1079 – ஓமர் கய்யாம் ஈரான் நாட்காட்டியை அமைத்து முடித்தார்.
1204 – சாட்டோ கைலார்டு சமரில் இங்கிலாந்தின் ஜான் மன்னர் நார்மாண்டி மீதான தனது ஆதிக்கத்தை பிரெஞ்சு மன்னர் இரண்டாம் பிலிப்பிடம் இழந்தார்.
1447 – ஐந்தாம் நிக்கலாசு திருத்தந்தை ஆனார்.
1479 – கனரித் தீவுகளை போர்த்துக்கல் காஸ்டில் பேரரசுக்கு வழங்கியது.
1521 – பேர்டினண்ட் மகலன் குவாம் தீவை அடைந்தார்.
1665 – பிரித்தானிய அரச கழகத்தின் அரச கழகத்தின் மெய்யியல் இதழின் முதல் இதழ் வெளியிடப்பட்டது.
1788 – கைதிகளைக் குடியமர்த்தும் திட்டத்தில் முதற்படியாக முதலாவது தொகுதி பிரித்தானியக் கைதிகள் அடங்கிய கப்பல் நோர்போக் தீவை அடைந்தது.
1790 – மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1820 – மிசூரி அமெரிக்காவின் அடிமை மாநிலமாக இணைந்தது.
1836 – அலாமா போர்: டெக்சாசில் அலாமா நகரை மெக்சிக்கோ படைகள் தாக்கிக் கைப்பற்றினர்.
1866 – இலங்கையில் கண்டி மாநகரசபைக்கான முதலாவது தேர்தல் இடம்பெற்றது.[1]
1869 – திமீத்ரி மென்டெலீவ் தனது முதலாவது தனிம அட்டவணையை உருசிய வேதியியல் கழகத்தில் சமர்ப்பித்தார்.
1882 – செர்பிய இராச்சியம் மீண்டும் நிறுவப்பட்டது.
1899 – செருமனியின் பேயர் நிறுவனம் “ஆஸ்பிரினை” வணிகச் சின்னமாகப் பதிந்தது.
1902 – ரியல் மாட்ரிட் கால்பந்துக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1912 – இத்தாலிய-துருக்கிப் போர்: முதல் தடவையாக வான்கப்பல்களை போர் ஒன்றில் இத்தாலியப் படைகள் பயன்படுத்தின.
1933 – பெரும் பொருளியல் வீழ்ச்சி: அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் அனைத்து வங்கிகளையும் மூடி வங்கி விடுமுறையாக அறிவித்தார்.
1940 – பின்லாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் தற்காலிகப் போர் ஓய்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.
1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் வான்படைகள் செருமனியால் ஆக்கிரமிக்கப்பட்ட நர்வா என்ற எசுத்தோனிய நகரைக் குண்டுகளால் தாக்கி, வரலாற்றுப் புகழ் மிக்க அந்நகரை அழித்தன.
1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் கோல்ன் நகரம் அமெரிக்கப் படைகளினால் கைப்பற்றப்பட்டது.
1946 – வியட்நாம் போர்: ஹோ சி மின் பிரான்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி பிரான்சு வியட்நாமை பிரெஞ்சு ஒன்றியம் மற்றும் இந்தோ-சீனக் கூட்டமைப்பினுள் தன்னாட்சி அதிகாரம் கொண்ட பகுதியாக ஏற்றுக் கொண்டது.
1953 – ஸ்டாலினின் மறைவையடுத்து சோவியத்தின் பிரதமராகவும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை செயலாளராகவும் கியோர்கி மாலென்கோவ் பதவியேற்றார்.
1957 – ஐக்கிய இராச்சியக் குடியேற்ற நாடுகளான கோல்ட் கோஸ்ட் மற்றும் பிரித்தானிய தோகோலாந்து ஆகியன இணைந்து கானா குடியரசு என்ற பெயரில் விடுதலை பெற்றன.
1964 – கிரேக்கத்தின் மன்னராக இரண்டாம் கான்சுடன்டைன் பதவியேற்றார்.
1964 – அமெரிக்காவின் இஸ்லாம் தேசம் அமைப்பின் தலைவர் எலிஜா முகம்மது குத்துச்சண்டை வீரர் காசியசு கிளேயின் பெயரை முகம்மது அலி என மாற்றினார்.
1967 – திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.
1967 – பனிப்போர்: யோசப் ஸ்டாலினின் மகள் சுவெத்லானா அலிலுயேவா ஐக்கிய அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றார்.
1975 – ஈரானும் ஈராக்கும் தமது எல்லை தொடர்பாக உடன்பாட்டிற்கு வந்தன.
1987 – பிரித்தானியப் பயணிகள் கப்பல் எரால்டு ஒஃப் பிரீ என்டர்பிரைசசு 90 செக்கன்களில் மூழ்கியதில் 193 பேர் உயிரிழந்தனர்.
1988 – மூன்று ஐரியக் குடியரசுப் படை வீரர்கள் ஜிப்ரால்ட்டரில் சிறப்பு வான்சேவையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2003 – அல்சீரியாவில் வானூர்தி ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 103 பேரில் 102 பேர் உயிரிழந்தனர்.[2]
2007 – இந்தோனீசியாவின் சுமாத்ராவில் இடம்பெற்ற இரண்டு அடுத்தடுத்த நிலநடுக்கங்களில் 70 பேர் வரையில் உயிரிழந்தனர்.
2008 – பக்தாதில் நிகழ்ந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 68 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1475 – மைக்கலாஞ்சலோ, இத்தாலிய ஓவியர், சிற்பி (இ. 1564)
1508 – நசிருதீன் உமாயூன், 2-வது முகலாயப் பேரரசர் (இ. 1556)
1697 – ஸ்ட்ரிங்கர் லாரன்சு, பிரித்தானிய இந்தியாவின் முதற் பெரும் படைத்தலைவர் (இ. 1775)
1806 – எலிசபெத் பிரௌனிங், ஆங்கிலேய-இத்தாலியக் கவிஞர் (இ. 1861)
1926 – ஆலன் கிரீன்சுபன், அமெரிக்கப் பொருளியல் அறிஞர்
1927 – கபிரியேல் கார்சியா மார்க்கேஸ், நோபல் பரிசு பெற்ற கொலம்பிய எழுத்தாளர் (இ. 2014)
1935 – அன்புமணி, ஈழத்து எழுத்தாளர் (இ. 2014)
1937 – சற்சொரூபவதி நாதன், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர்
1937 – வலண்டீனா தெரெசுக்கோவா, உருசிய விண்வெளி வீராங்கனை
1938 – சி. வி. விசுவேசுவரா, இந்திய வானியலாளர் (இ. 2017)
1948 – இசுடீபன் சுவார்ட்சு, அமெரிக்க இசையமைப்பாளர்
1953 – மாதவ் குமார் நேபாள், நேப்பாளத்தின் 34வது பிரதமர்
1953 – கரோலின் பொற்கோ, அமெரிக்க வானியலாளர்
1954 – ம. சா. அறிவுடைநம்பி, தமிழறிஞர், கல்வியாளர் (இ. 2014)
1972 – கரு பழனியப்பன், தமிழகத் திரைப்பட இயக்குநர்

இறப்புகள்

1866 – வில்லியம் ஹியூவெல், ஆங்கிலேய வரலாற்றாளர், மெய்யியலாளர் (பி. 1794)
1900 – காட்லீப் டைம்லர், செருமானியத் தொழிலதிபர், பொறியியலாளர் (பி. 1834)
1939 – லிண்டெமன், செருமானியக் கணிதவியலாளர் (பி. 1852)
1973 – பெர்ல் பக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1892)
1982 – அய்ன் ரேண்ட், உருசிய-அமெரிக்க எக்ழுத்தாளர், மெய்யியலாளர் (பி. 1905)
1986 – ஜோர்ஜியா ஓ’கீஃப், அமெரிக்க ஓவியர் (பி. 1887)
2000 – எஸ். ஆறுமுகம், ஈழத்துப் பொறியியலாளர், எழுத்தாளர் (பி. 1905)
2002 – சி. ஜேசுதாசன், தமிழக இலக்கிய வரலாற்றாசிரியர் (பி. 1919)
2005 – அன்சு பேத்து, நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1906)
2008 – கி. சிவநேசன், இலங்கை அரசியல்வாதி (பி. 1957)
2009 – சோ. அழகர்சாமி, தமிழக அரசியல்வாதி (பி. 1926)
2015 – ராம் சுந்தர் தாசு, பீகாரின் 18-வது முதலமைச்சர் (பி. 1921)
2015 – கிஷோர், தமிழ்த் திரைப்படத் தொகுப்பாளர் (பி. 1978)
2016 – நான்சி ரேகன், அமெரிக்க நடிகை, அமெரிக்காவின் 42வது முதல் பெண்மணி (பி. 1921)
2016 – கலாபவன் மணி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர், பாடகர் (பி. 1971)
2019 – டைப்பிஸ்ட் கோபு, தமிழக நாடக, திரைப்பட நடிகர்

சிறப்பு நாள்

நிறுவன நாள் (நோர்போக் தீவு, 1788).
விடுதலை நாள் (கானா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1957)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...