சபரிமலை மண்டல பூஜை
மண்டல பூஜைக்கான ஐயப்பன் கோவில் நடை திறப்பு: சரண கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோயில் நடை திறக்கப்பட்டதும் தந்திரி கண்டரூ மகேஷ் மோகனரு, மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி ஆகியோர் பூஜை செய்தனர். பின்னர் அய்யப்பன் மீது சாத்தப்பட்டிருந்த திருநீரை எடுத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். இதனையடுத்து, புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரிக்கு, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு மூலமந்திரம் சொல்லிக் கொடுத்து சன்னதிக்குள் அழைத்து சென்றார். அதேபோல மாளிகைபுரம் மேல்சாந்தியாக எம்.எஸ்.பரமேஸ்வரன் நம்பூதிரி பொறுப்பு ஏற்றார். அதன்பின் சபரிமலையில் புனிதமாகக் கருதப்படும் 18 படிகளுக்கு படிபூஜை நடத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கார்த்திகை முதல் நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்தி ஏ.கே.சுதிர் நம்பூதிரி அய்யப்பன் கோவிலில் முறைப்படி பூஜைகள் செய்து மண்டல பூஜையைத் தொடங்கி வைத்தார். சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதையொட்டி அங்கு குவிந்திருந்த ஏராளமான பக்கதர்கள் சரண கோஷத்துடன் அய்யப்பனை தரிசனம் செய்தனர்