முக்கிய செய்திகள்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சுங்கத்துறை அதிகாரி ஜெக்மோகன் மீனா என்பவருக்கு 4 ஆண்டுகள் சிறை மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை – சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.
பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டீல் கவனம் செலுத்த வேண்டும். உலகளாவிய வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தகம் வெறும் 15% மட்டுமே – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரை.
டெல்லியில் நவம்பர் 17ம் தேதி அனைத்து கட்சிக்கூட்டத்திற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு. வரும் 18ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது
முதலமைச்சர் தலைமையில், ஆய்வுக்கூட்டம் தொடங்கியது! தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் தொடங்கியது. தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்பு.
காலியாக உள்ள நோட்டரி பப்ளிக் நியமனத்தில் மாற்றுதிறனாளிகள் சட்டபடி, 4% ஒதுக்கீட்டை மாற்றுத்திறனாளி வழக்கறிஞர்களுக்கு ஒதுக்க பரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
தீப்பெட்டிக்கான ஜிஎஸ்டியை 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்க மத்திய நிதியமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் – அமைச்சர் கடம்பூர் ராஜு.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்ட விவகாரம்: வன உயிரியல் பூங்கா விதிகளை மீறியதாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகத்திற்கு நோட்டீஸ். உரிய விளக்கம் அளிக்க மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் உத்தரவு.